சிறுகதைப் போட்டி சென்னை தினத்தை முன்னிட்டு கிழக்கு பதிப்பகம் நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 பற்றிய அறிவிப்பு. விருப்பமுள்ளவர்கள் அவசியம் கலந்து கொள்ளவும் •••• வணக்கம். சென்னை தினம் (மெட்ராஸ் டே) சென்னையால் கொண்டாடப்படும் ஒரு சிறந்த கூட்டு நிகழ்வாகும். இந்நிகழ்வை முன்னிட்டு ஒரு சிறுகதைப் போட்டியை நடத்த கிழக்கு பதிப்பகம் முடிவெடுத்துள்ளது.அனைவரும் இந்த சிறுகதைப் போட்டியில் பங்குகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். * சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும். * சிறுகதைப் போட்டிக்கு தங்கள் படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் ஜூலை 20, 2018. * வெற்றி பெற்ற சிறுகதைகள் பற்றிய அறிவிப்பு ஆகஸ்ட் 4ம் வாரம் அறிவிக்கப்படும். * யூனிகோட் எழுத்துருவில் டைப் செய்து மின்னஞ்சலில் கதைகளை அனுப்பி வைக்கவேண்டும். * அனுப்பி வைப்பவரின் நிஜப் பெயர், முழு முகவரி, தொலைபேசி எண், இமெயில் முகவரி தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும். * கதையை தட்டச்சு செய்து பிரிண்ட் எடுத்து தபால் மூலமும் அனுப்பலாம். கதைகள் தேர்ந்தெடுக்கப்படாத பட்சத்தில் அதைத் திருப்பி அனுப்ப இயலாது. எனவே தேவையான பிரதிகளை எடுத்து வை...