முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிறுகதை பாகிஸ்தானி பிரியாணிக் கடை

டெல்லி அசோக் மந்தர் பகுதியில் அக்கட்டிடம்  இருந்தது.  அப்பகுதியின்  பாழடைந்தக் கட்டிடம் அது ஒன்றுதான். அக்கட்டிடம் பார்க்க மசூதியைப் போலிருந்தது. ஆனால் அது மசூதி அல்ல. மசூதியைப் போன்ற கட்டிட வேலைப்பாடுகள் கொண்ட பழைய காலத்து உணவகம் அது.  கட்டிடத்தில் இல்லாத இரண்டு ஸ்தூபிகள்  அது வழிப்பாட்டுத் தளம் இல்லாத வேறு ஒன்று எனச் சொல்லிக்கொண்டிருந்தது. அதன் மேற்கூரையும் திமில் போன்ற குடைவும் பார்க்க மசூதியைப் போலிருந்தது. முகலாயக் கலை அம்சத்துடன் கட்டப்பட்டிருந்த அக்கட்டிடத்தின் பெரும்பகுதி சாயம் இழந்துபோய் மேற்பகுதியின் ஒரு பகுதி  இடிந்து வெளிப்புறமாக விழுந்துவிட்டிருந்தது. சுதந்திர இந்தியக் காலத்தில் அப்பகுதியின் மிகப்பெரிய உணவகமாக அது இருந்தது. தென் இந்திய, வட இந்திய, மேற்கத்திய என மூன்று வகை உணவுகளும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில்  கிடைக்குமளவிற்கு பிரசித்திப்பெற்ற உணவகம் அது. இன்றைக்கு அக்கட்டிடத்தைச் சுற்றிலும் அடைசலாக புல் பூண்டு புதர்கள். மேல் ,கீழ் தளத்தில் ஆல , அரச கன்றுகள் முளைத்திருந்தன.  மேற்கூரையில் விட்டிருந்த ஆணி வேர்  பூமி வரைக்குமாக வள...