முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எனது வகுப்பறையில் ஒரு நாள் - தொடர்

எனதுவகுப்பறையில்ஒருநாள்....................
“ நம்நாட்டுத்தியாகிகள் “ எனும்வரலாற்றுபாடத்தைநடத்துவதற்குமுதல்நாள்அப்பாடத்திற்குதொடர்பானஒருவீட்டுவேலைஒன்றுகொடுத்தேன். “ மாணவர்களே...... நாளைக்குவருகின்றபொழுதுஉங்களுக்குபிடித்தமானஒருதியாகியின்படத்தைகத்தரித்துஒட்டிவரவும்“
மறுநாள்மாணவர்கள்ஒருவரையொருவர்போட்டிப்போட்டுக்கொண்டுஅவர்கள்கத்தரித்துஒட்டிருந்ததியாகிகளின்படத்தைகாட்டத்தொடங்கினார்கள்.
காந்திஜி, நேதாஜி, ஈ.வெ.ராபெரியார், ராஜாஜீ, நேருஜீ, அம்பேட்கர், ராஜாராம்மோகன்ராய்,  சுவாமிவிவேகானந்தர், பாலகங்காதரதிலகர், தயானந்தசரஸ்வதி, அன்னிபெசன்ட்அம்மையார், சரோஜினிநாயுடு, இந்திராகாந்தி, ..........................................
மாணவர்கள்எங்கேதான்சேகரித்தார்களோ....!பார்க்கவேவியப்பாகஇருந்தது.
ஒருமாணவன்மட்டும்தயக்கமாகநின்றுக்கொண்டிருந்தான்.அவன்வைத்திருந்தபடத்தைப்பார்த்துமற்றமாணவர்கள்கிண்டல்செய்துக்கொண்டிருந்தார்கள். அந்தமாணவனைஅருகினில்அழைத்தேன்.அவனதுபடத்தைபார்த்தேன்.மிகஅழகானஒருசிறுமியின்புகைப்படத்தைநோட்டில்ஒட்டியிருந்தான்.
அந்தபடத்தைபார்த்தேன்.இதற்குமுன்எங்கேயோபார்த்தஞாபகம்கண்முன்நிழலாடியது.இந்தசிறுமியார்என்றுஎன்னால்சட்டெனஊர்ஜிதம்படுத்தமுடியவில்லை.அந்தசிறுவனிடமேகேட்டேன்.“ தம்பி.............. இந்தசிறுமியார்?“
அந்தசிறுவன்சற்றுதயங்கியபடிசொன்னான்.“தெரஸாசார் “.மாணவர்கள்குபீர்எனசிரித்தார்கள்.“ தம்பி........தெரசாஎன்றால்முகத்தில்சுருக்கங்கள்இருக்கவேண்டுமே, தலையில்முக்காடுபோட்டிருக்கவேண்டுமே “ என்றேன்.
“ இதுசிறுமிதெரஸாசார்“  என்றபடிவிழித்துக்கொண்டிருந்தான். அந்தபடத்தைபொக்கிஸமாககருதிமார்போடுஅணைத்தேன்.கூடவேஅவனையும்!
எனதுவகுப்பறையில்ஒருநாள்.................
பள்ளியில்ஆசிரியர்கள்பட்டப்பெயரால்அழைக்கப்படுவதுதவிர்க்கமுடியாதஒன்றாகிவிட்டது.அந்தவகையில்எனக்குபலபெயர்கள்உண்டு .அதில்ஒருபெயர்ஆய்தஎழுத்து.
அந்தவருடத்தின்முதல்நாள்பாடவேளைஅது.நான்ஒருவகுப்பறைக்குள்நுழைந்தேன் .மாணவர்கள்ஆரவாரத்துடன்எழுந்து“ வணக்கம்ஐயா ” என்றார்கள் .  மானசீகமானசிரிப்புடன்அவர்களுடையமரியாதையைஆமோதித்தேன்.மாணவர்கள்அங்கும்இங்குமாகசிதறிக்கிடந்தவர்களைவரிசையாகஉட்காரவைத்துப்பார்த்தேன்.வகுப்பறைஅழகாகதெரிந்தது.
“ பிள்ளைகளே............. உங்களைப்பார்க்கஉயிராகவும், மெய்யாகவும்தெரிகிறீர்கள் ” என்றேன்.   பெண்கள்“ நாங்கள்தான்உயிர் ” எனஆர்ப்பரித்தார்கள். பதிலுக்குஆண்கள்“ இல்லையில்லைநாங்கள்தான்உயிர் ” என்றார்கள். வகுப்பறைஆரவாரமாகஇருந்தது
நான்ஆண்கள்உட்கார்ந்திருக்கும்பக்கம்திரும்பி “ இவர்கள்தான்உயிர் “ என்றேன்.  பெண்களின்தலைகள்சட்டெனஒடிந்துகீழேதொங்கிப்போகின. அவர்களுடையமுகங்கள்ஏமாற்றத்துடன்தத்தளித்தன.
“ கண்ணுங்களா............ நீங்கள்பதினெட்டுபேர்இருக்கிறீர்கள்அதனால்நீங்கள்மெய். ஆண்கள்பனிரெண்டுபேர்இருப்பதால்அவர்கள்உயிர் ” என்றேன். அப்பொழுதுஒருமாணவன் “ ஐயா......... அப்படியானால்நீங்கள்ஆயுதம்சரிங்களா? ”  என்றான்.அவன்அப்படிசொன்னதும்மாணவர்கள்சில்லரைக்காசுகள்சிதறுவதைப்போலசிரித்தார்கள்.
உயிரும்மெய்யுமாகசேர்ந்துமுப்பதுபேர்சிரித்ததுஇருநூற்றுபதினாறுபேர்சிரிப்பதைப்போலஇருந்தது.

                                                                                                                            akaramblogspot.com
[ எனதுவகுப்பறையில்ஒருநாள்...........................................
                    “சார்................. எனக்குஒருசந்தேகம்“
“  என்னதுப்பா...............?“
“ 21.12.2012அன்றைக்குஉலகம்அழியப்போகுதுனுபேசிக்கிறாங்களேஉண்மையா?“
“ நீஎன்னப்பாநினைக்கிறே? உலகம்அழியுமுனுநினைக்கிறீயா?அழியாதுனுநினைக்கிறீயா?“
“ நான்உலகம்அழியாதுனுதான்சார்நினைக்கிறேன்“
“ ஏன்அப்படிநினைக்கிறே?“
“ இந்தஉலகத்தைநாமலேஅழிச்சிக்கிட்டதான்உண்டு.“
“ அதுவாகவேஅழியாதா?“
“ எப்படிசார்அழியும்?. நம்மஅம்மா ,அப்பாகஷ்டப்பட்டுஒருவீட்டைக்கட்டிட்டுஅவங்களேஅதேஇடிப்பாங்களாசார்?“
“ இடிக்கமாட்டாங்கப்பா “
“ இந்தஉலகத்திலஉள்ளதாவரம், மரம் , செடி,கொடி, பூச்சி , பாம்பு , பூரானுஎத்தனையோஇருக்கு. இத்தனையும்உருவாகஎத்தனைஆண்டுகள்சார்பிடிச்சிருக்கும்?“
“  எப்படியும்கோடிஆண்டுகள்பிடிச்சிருக்கும்“
“ இத்தனையையும்கடவுள்தானேசார்படைச்சிருப்பார்?“
“ இயற்கைபடைச்சது “
“ ஆமாம்சார்இயற்கை . இயற்கைகஷ்டப்பட்டுஇத்தனையையும்உருவாக்கிட்டுஅதுவேஎப்படிசார்அழிக்கும்“
“ அழிக்காதுதாப்பா, அழிக்காது. நீபுத்திசாலிபையன்புரிஞ்சிக்கிட்ட .நம்மமக்கள்விவரம்தெரியாமபேசிக்கிறாங்க.நீசொல்றமாதிரிஉலகம்அழியப்போறதில்ல .அழியவும்அழியாது.“
“ நான்அழியாதுனுசொல்றேன்சார். நம்மவினித்இருக்கான்லசார்.அவன்உலகம்அழியத்தான்போகுதுனுசொல்றான்சார் “
“ தெரியாமசொல்லிருக்கான்“
“அதுமட்டுமில்லசார்.உலகம்அழிஞ்சாலும்அவனுக்குகவலையேஇல்லையாம்“
“ ஏன்னுகேட்டியா?“
                         ” கேட்டேன்சார். ,உலகத்திலேயேபாதுகாப்பானஇடம்அம்மாவோடமடிதானானம்.  உலகம்அழியுறப்பஅவன்அம்மாமடிக்குள்ளபோய்படுத்துக்கிருவேன்னுசொல்றான்சார்“
“ நீயும்அம்மாவோடமடிக்குள்ளபோய்படுத்துக்கோ  “
“ என்னாலமுடியாதேசார்“
“ ஏன்..............?“
“ எனக்குத்தான்அம்மாஇல்லையே.......................“
                          “ .................................................................“
அவனைப்பொறுத்தவரைஅவனுக்கானஉலகம்என்றோஅழிந்துவிட்டது. அவனுக்கானமிச்ச ,சொச்சஉலகம்இந்தபள்ளிக்கூடம்தான். 
எனதுவகுப்பறையில்ஒருநாள்..........................................
      “  கோபிகா.................... இங்கேவாம்மா “
“ என்னங்கசார்......................?“
“ நீஇப்பஎத்தனாம்வகுப்புபிடிக்கிறே?“
“ ஒன்னாம்வகுப்புசார்“
“ நீஅந்தவார்த்தைசொல்லலாமா...............?“
           “.............................................................“
“ ஏன்அவனைஅப்படிசொன்னே?“
“ சார். நானும்சிவனேனுஉட்கார்ந்திருந்தேன்சார்.அவன்என்னைஅடிச்சிட்டுஓடினான்சார்.அதனாலதான்சார்அவனைநான்....................“
“ இந்தவார்த்தைஉனக்குயாருசொல்லிக்கொடுத்தா..............?“
“ எங்கதெருவுலபேசிக்கிருவாங்கசார்“
“ உன்அம்மாவும்இந்தவார்த்தையசொல்லுவாங்களா...............?“
“ எப்பவாவதுசொல்லுவாங்கசார்“
“ எப்பசொல்லுவாங்க?“
“  பைப்லதண்ணீர்பிடிக்கிறப்பஅம்மாசொல்லுவாங்கசார்“
“ பிறகு................?“
“ அம்மாவுக்கும்அடுத்தவீட்டுக்கும்சண்டைவந்தால்அம்மாசொல்லிதிட்டுவாங்கசார்“
“ அதைநீசொல்லலாமா.................?“
             “ ..........................................“
“ சொல்லுஅதைநீசொல்லலாமா......................?“
“ சொல்லக்கூடாதாசார் ?“
“  நீநல்லபுள்ளதானே...........?“
“ ம்சார்“
“ அப்ப ,   நீசொல்லக்கூடாது“
“ ஏன்சார்சொல்லக்கூடாது............? “
“ அதுஅசிங்கவார்த்தை “
“ அசிங்கவார்த்தையாசார்..........?“
“ ஆமாம்மா“
“ அப்படினாஎன்னதுசார்...................?“
            “ .........................................................“
இந்தகேள்விக்கானபதில்எந்தஒருஅகராதியிலிந்தும் ,  நண்பர்சூழலிருந்தும்அவளுக்குகிடைத்துவிடக்கூடாதுஎன்பதேஎனதுவேண்டல் , பிராத்தனை .
எனதுவகுப்பறையில்ஒருநாள்
                                அன்றுஅக்டோபர்30 ,உலகசேமிப்புதினம்.  மாணவர்களிடம்சேமிக்கும்பழக்கத்தைஊக்கிவிக்கவேண்டும்எனும்நோக்கில்அன்றையதினவகுப்பைத்தொடங்கினேன்.
“ மாணவர்களே...................  தேனீக்களின்சேமிப்புதான்நாம்விரும்பிஉண்ணும்தேன் . மேகம்தரும்மழையிலும் ,தென்னைமரம்தரும்இளநீரிலும்,.................. சேமிப்புஇருக்கிறது.  இந்தபூமியில்உள்ளஆறு ,குளம், கடல்எல்லாமேசேமிப்பின்அடையாளங்கள்தான். சிறுதுளி, பெருவெள்ளம்அல்லவா!.“என்றவாறுமாணவர்களின்முகத்தைகவனித்தேன். அவர்கள்முகத்தில்ஒருவிதகெலிப்பு.  எதையோசொல்லிபாராட்டுபெற்றுக்கொள்ளவேண்டும்என்கிறமாதிரியானஆர்ப்பரிப்பு. அவர்களதுஆர்வத்திற்குபச்சைக்கொடிகாட்டினேன்.
“  நான்சேமித்தகாசில்வாங்கியதுதான்சார்இந்தபேனா “ என்றவாறுபேனாவைதூக்கிக்காட்டினான்ஒருவன். மற்றொருவன்“ சார்..........இந்தபுத்தகைப்பைஎன்பாட்டிசேமித்தபணத்தில்வாங்கியது “ என்றான். இப்படியாகபலரும்பலதைசொன்னார்கள்.
இரண்டுபேர்மட்டும்ஒன்றும்சொல்லாமல்உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில்ஒருவனைஎழுப்பிக்கேட்டேன்.“ தம்பிஉன்வீட்டில்யாரும்எதையும்சேமிக்கிறதுஇல்லையா?“. அவன்மெல்லஎழுந்தான்.“ சார்............ எங்கவீட்லமழைநீர்சேமிக்கிறோமேஅதைசொல்லலாமா ?“ எனக்கேட்டான். “  அருமை. நல்லபழக்கம்.“ என்றவாறுஅவனைகையைகுலுக்கினேன். அவனதுமுகத்தில்அப்படியொருபிரசாசம்.
அடுத்ததாகஒருவன்ஒன்றும்சொல்லாமல்திறு , திறுவெனமுழித்தவாறுநின்றுக்கொண்டிருந்தான் “ தம்பி.......  உனக்குசேமிக்கும்பழக்கம்கிடையாதா? ”  எனக்கேட்டேன்.அவன்மௌனமாகநின்றுக்கொண்டிருந்தான்.அவனைப்பார்த்துமற்றமாணவர்கள்கேலிசெய்வதைப்போலசிரித்துக்கொண்டிருந்தார்கள்.அவன்சுற்றும்முற்றும்பார்த்தான்.கணினிப்பொறிஅவன்கண்களில்பட்டது.அதைப்பார்த்ததும்அரும்புபோலசிரித்தான்  “ எனக்கும்சேமிக்கும்பழக்கம்உண்டுசார்“ என்றவாறுநிமிர்ந்துநின்றான். “ என்னடாகண்ணுசேமிக்கிற ?“  கேட்டேன்.
“ நான்கம்ப்யூட்டரில்வரைகிறஓவியங்களைctrl + sமூலமாகசேமிக்கிறேன்சார் “ என்றான்.  அவன்சொன்னப்பதிலால்வகுப்பறையேவியப்புகூடியிருந்தது. இதில்என்னவியப்பு?இதுகணினிஉலகம்அல்லவா!
இதன்பிறகுஎனதுவகுப்புகரும்பலகையில்நிரந்தரஎழுதப்பட்டிருக்கும்வாசகம்  ctrl + s . அதற்குஅருகில்  TIME ,   WATER , POWER , ELECTRIC .................. “ போன்றவார்த்தைகள்காலத்திற்குஏற்பஇடம்பெற்றுவருகிறது.
எனதுவகுப்பறையில்ஒருநாள்
அன்றையதினம், ஒருவிசயத்தைமாணவர்களிடம்மனம்விட்டுபேசஎண்ணினேன்.  “ தம்பிகளா................ நான்படிக்கிறகாலத்தில்எனக்குசொல்லிக்கொடுத்தஆசிரியர்கள்எங்களைஅடித்துதான்சொல்லிக்கொடுத்தார்கள். நீங்கள்ரொம்பவும்கொடுத்துவைத்தவர்கள்.ஆசிரியர்களிடம்அடிவாங்காமல்படிக்கிறீர்கள்“ என்றேன்.
அந்தவகுப்பில்ஒருசுட்டிஇருக்கிறான்.அவன்“  நீங்கள்எங்களைமாதிரிநன்றாகபடித்திருக்கமாட்டீர்கள் “ என்றான். அவன்அப்படிசொன்னதும்மற்றமாணவர்கள்வயிறுகுலுங்கசிரித்துவைத்தார்கள்.
“ ஆமாம். நான்படிக்கிறகாலத்தில்கணினி ,தொலைக்காட்சி , ஆடியோபோன்றவசதிகள்இல்லை..............“  என்றேன்.மாணவர்கள்நான்சொன்னதைஅமைதியாககேட்டுக்கொண்டிருந்தார்கள். “ நான்பள்ளிக்குவரும்பொழுதுஉங்களுக்காகசெய்தித்தாள்கள்வாங்கிவருகிறேன்இல்லையா !. நீங்களும்அதைப்படித்துநாட்டுநடப்புகளைதெரிந்துக்கொள்கிறீர்கள்இல்லையா! ஆனால்நான்படிக்கிறகாலத்தில்செய்தித்தாள்படிக்கவேண்டுமெனில்நகரத்திற்குசெல்லவேண்டும் “ என்றேன்.
ஒருமாணவன்சட்டென்றுஎழுந்தான்.அவனைமற்றொருமாணவன்தடுத்தான்.அவனிடம்“  என்னப்பா .............. சொல்லவந்ததைசொல்லு ”என்றேன். அவன்ஒருகணம்என்னைஆழமாகபார்த்தான்.“ சார்............. இனிநீங்கள்எங்களைஅடித்தால்உங்களுக்குமூன்றுவருசம்ஜெயில்தண்டனையாமே . நான்பேப்பர்லபடிச்சேன்சார்“ என்றபடிஎன்னைபரிதாபமாகபார்த்தான்.
மற்றொருவன்“ சார்....... இனிநீங்கள் , எங்களுக்குஅடிக்ககொடுக்கமாட்டீங்களாசார்?“ எனக்கேட்டான்..
“  ஏன்கொடுக்கமாட்டேன்! தவறுசெய்தால்இரண்டுஅடிகள்கொடுப்பேன்“ என்றேன். அவர்கள்முகத்தில்ஒருமாறுதல். என்னைபயத்தோடுபார்க்கத்தொடங்கினார்கள்.  “
“  ஆமாம்.  மாணவர்கள்தவறுசெய்தால்இரண்டுஅடிகொடுக்கத்தான்போகிறேன்.திருக்குறளுக்குஇரண்டுஅடிகள்தானே.“


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...

மதினிமார்கள் கதை

கோணங்கி எழுதிய சிறுகதைகளில் மதினிமார்கள் கதை பரவலான கவனிப்பைப் பெற்றது. அக்கதையை  இன்றைய தினம் வாசித்தேன். சாத்தூரையொட்டிய நென்மேனி மேட்டுப்பட்டியில்  வாழும் பெண்கள் செம்பகத்திற்கு மதினிகளாக இருக்கிறார்கள். அவனது மூக்கில் சின்ன வயதில் அணிவித்த செம்புகம்பியால் அவன் செம்புகோம் என கேலியாகவும் செல்லமாகவும் அழைக்கப்படுகிறான். அவனை வேலைக்காரனாக , எடுபிடி ஆளாக,... சோறுப்போட்டு ஒரு ஊரே வளர்க்கிறது.  ஆவுடத்தங்க மதினி சுப்பு மதினி காளியம்மா மதினி அமராவதி மதினி குருவு மதினி மாணிக்க மதினி என மதினிமார்களுடன் வளர்ந்த செம்பகம் வெளியூரிலிருந்து  அக்கிராமத்திற்கு செல்கையில் அவ்வூர் எப்படியாக இருக்கிறது என்பதுதான் கதை சொல்லவரும் செய்தி.  இருண்ட தார் விரிப்பின் ஓரங்களில் உருவமே மாறிப்போய் - என்கிற முடிவுப்பத்தியால் கிராமம் அடைந்த பரிணாமத்தைக் காட்டுகிறார். முதிர்ந்த வயதுடைய பெரியாள் உருமியைத் தேய்க்கிற தேய்ப்பில் வருகிற அமுத்தலான ஊமைக்குரல் அடிநெஞ்சுக்குள் இறங்கி விம்மியது என்கிற இடம் துக்கத்தை நனைக்கும் வரி. பனையிலிருந்து கிடைக்கும் பொருளில் ஒன்றாக தவுண் அ...

அமைதி,விசாரணை நடந்துகொண்டிருக்கிறது

சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.              *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’ நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின. கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீ...