முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நூல் போட்டி 2015 2016 ஆண்டுகளில் வெளியான இரண்டு நூல்கள். கடைசி தேதி ஏப்ரல் 30
தற்கால கன்னடச் சிறுகதையின் தந்தை என அழைக்கப்படும் மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் தேர்ந்த சிறுகதைகளை வாசிக்கும் வாய்ப்பு நூலகத்தின் வாயிலாகக் கிடைத்தது. இக்கதைகளை மொழிப்பெயர்த்திருப்பவர் சேஷநாராயணா. இத்தொகுப்பில் ' தர்ம சேவகன் பிட்ஸ் ஸ்டீபன் ' என்றொரு சிறுகதை. மனுநீதி சோழன் தன் மகனை தேர்க்காலிலிட்டு ஏற்றி நீதியை நிலை நாட்டியதைப்போன்ற கதைக்களத்தைக் கொண்ட கதையாக அக்கதை எழுதப்பட்டிருக்கிறது. ஐயர்லாண்டில் கியால்வே என்பது ஒரு நகரம். நானூறு வருடங்களுக்கு முன்பு ஜேம்ஸ் லிஞ்சுபிட்ஸ் ஸ்டீபன் நகரச் சபை தலைவராக இருந்தான். அவருடைய ஒரே மகன் ஸ்பெயின் நண்பரின் மகனிடம் நண்பனாகிறான். இருவரும் ஒரே பெண்ணை காதலிக்கிறார்கள். இருவருக்கும் பெண்ணை அடைவதில் போட்டி வருகிறது. பெண் ஸ்பெயின் இளைஞனை பெரிதும் விரும்புகிறாள். என் நாட்டுப் பெண் எனக்கே உரிமையென ஸ்பெயின் இளைஞனைக் கத்தியால் குத்தி கொன்றுவிடுகிறான். கொலை விசாரணை நகரச் சபை தலைவரிடம் விசாரணைக்கு வருகிறது. மகனுக்கு மரணத்தண்டனை விதிக்கிறார். மரணத்தண்டனையை நிறைவேற்ற பணியாளர்கள் முன் வர மறுக்கிறார்கள். அந்நிய இளைஞனுக்காக நம் நாட்டு குடிமகனுக்கு  ஏன் தண்...
நான் வாசித்த மொழிப்பெயர்ப்பு கதைத்தொகுப்புகளில் மிக முக்கியமானத் தொகுப்பாக 'உலக கிளாசிக் கதைகள்' என்கிறத் தொகுப்பைத்தான் சுட்டிக்காட்டத் தோன்றுகிறது. ஓ.ஹென்றியின் The gift of the magic  ஹொராசியோ கிரோகாவின் Three letters and a footnote லியோ டால்ஸ்டாயின் How much land does a man need? ஹெர்பர்ட் கோல்ட் ஸ்டோனின் Virtuoso காப்ரியல் கார்சியா மார்க்கேஸின் One of these days ஆஸ்கர் ஒயில்டின் The devoted friend நடின் கோர்டிமரின் Once upon a time முல்க் ராஜ் ஆனந்தின் The lost child எட்கர் ஆலன் போவின் The tell tale heart  லாங்ஸ்டன் ஹியூஸின் Thank you ,M'  am ஃப்ரான்ஸ் காஃப்காவின் A country doctor கி டு மாப்பாசானின் The necklace மெக் முண்டெலின் Small change நிஜாம் கஞ்சவியின் Lamlash Manuel கரெல் சப்பெகின்The shirts கதைகளின் தொகுப்பாக  இந்நூல்  வெளிவந்திருக்கிறது. புதிய வாழ்வியல் வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்நூல் 2014 ஆம் ஆண்டின் சிறந்த வெளியீடு. மேற்காணும் கதைகளை பலரும் மொழிப்பெயர்த்திருந்தாலும் அ.ஜெனி டாலியின் மொழிப்பெயர்ப்பு தமிழ்க்கதைகளைப்போல காட்ச...

மருதாணிக் கவிதைகள் - சின்னவள்

என் வீட்டில் பெரியவள் , சின்னவள் என்று இருவர் இல்லை. மீரா.செல்வக்குமாரின் ' சின்னவள்  ' என்கிற கவிதைத் தொகுப்பை வாசித்ததும் என் மனைவியை பெரியவளாக்கி என் மகளை சின்னவளாக்கிக்கொண்டேன். சிப்பியின் வாயிற்குள் விழும் மழைத்துளி முத்தாகிவிடுவதைப் போல இந்நூலினை வாசிக்கையில் என்னையும் அறியாமல் என் மனைவியும்  மகளும் அவ்வாறு ஆகிவிட்டிருந்தார்கள். இந்நூல் கவிஞரின் முதல் நூல். முதல் நூலுக்குரிய  தடுமாற்றம் இருக்கவே செய்கிறது. நூலில் அணிந்துரை என்கிற அணிகலன்  இல்லாமல் இருக்கிறது. சிலருக்கு அணிகலன்  இல்லாத  கழுத்துதான்  அழகாக இருக்கும். அந்த வகையில் இந்நூலிற்கு அணிந்துரை என்கிற அணிகலன் தேவைப்பட்டிருக்கவில்லை. ஆனால் என்னுரை இல்லாத தொகுப்பு என்பது திருகாணி இல்லாத தோடு இல்லையா! இந்தச் சுட்டிக்காட்டலை கவிஞர் ஏற்க மறுக்கக்கூடும். ஒரு வேளை மறுத்தால் சின்னவளிடம் திருத்தொண்டனாக அடிப்பணிவதைத்தவிர வேறு வழித் தெரியவில்லை எனக்கு. சின்னவள் கவிதைகளை வாசிக்கையில் பெரியவள்களுக்கு பொறாமை வரவேச் செய்யும். அப்படியான ஈரம் கவிதைகளில். ஒவ்வொரு கவிதையும் மருதாணியைப்போல மனதில் ஒட்டிக்க...

நூல்கள் வரவேற்கப்படுகின்றன.

சுஜாதா விருது - நூல்கள் வரவேற்கப்படுகின்றன. உயர்மை பதிப்பகமும் - சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து வழங்கும் சுஜாதா விருதிற்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன.  சிறுகதை,கவிதை, நாவல், கட்டுரை நூல்கள்  4 படிகள் அனுப்பப்பட வேண்டும். இது தவிர சிற்றிதழ் பிரிவிலும் பரிசு உண்டு. ஒவ்வொரு பிரிவிற்கும் தலா ரூபாய் பத்தாயிரம் பரிசு. கடைசி தேதி மார்ச் - 25 நூல்கள் அனுப்பவேண்டிய முகவரி சுஜாதா விருதுகள் உயிர்மை 11 / 29 , சுப்ரமணியம் தெரு அபிராமபுரம், சென்னை - 600018. நன்றி - உயிர்மை மற்றும்  திஇந்து
அகநி வெளியீட்டில் மிகச்சிறந்த தொகுப்பாக வந்திருக்கிறது மு.ஆனந்தன் அவர்களின் ' யுகங்களின் புளிப்பு நாவுகள்' என்கிற கவிதைத் தொகுப்பு. உதயசங்கர் மற்றும் அமிர்தம் சூர்யா  இருவரும் கவிதைகளுக்கு நெற்றிப்பொட்டு வைத்திருக்கிறார்கள். கவிதை என்பதற்கு அமிர்தம் சூர்யா கொடுத்திருக்கும் முன்னுரை அலாதியானது.   அத்தனையும் நவீனக் கவிதைகள்.தேர்ந்த நடை. துள்ளல் எழுத்து. நளினத்தில் தொட்டு எடுத்த  நவயுகக்கவிதைகள். அரிதாரங்கள் பூசி வெள்ளையும் சொள்ளையுமாய்த் திரிகிறது பகல் அரணாக்கொடியையும் உதிர்த்து அம்மணக்கட்டையாய் கிடக்கிறது இரவு என்னதான் வெளிச்சத்தைப் பீய்ச்சியடித்தாலும் நிழலாய் பின் தொடர்கிறது இருள் என்கிற கவிதை இருளும் இருண்மையும் மடமையும் தொய்த்த வாழ்வின் அவயங்களைப் பேசுகிறது. இக்கவிதையில் பகல் பகல்ல. இரவு இரவும் அல்ல. பகல் பிச்சைக்காசாக நீட்டும் ஓட்டுக்குப் பணம் என்றால் இரவு பிச்சைக்காரர்களாகிப்போகும் தடித்த வறுமை. பகல் நிவாரணம் என்றால் இரவு தொடரும் பலாத்காரம். இப்படியாக பல பத்து கவிதைகள். யுகங்களின் புளிப்பு நாவுகள் என்கிற கவிதை புளித்த வாழ்வின் சுவடு. பகலை மொண்டுக் கு...
இதுநாள் வரைக்கும் இல்லாத சிறுகதை வாசகர்களுக்கு ஒரு போட்டி.  இப்போட்டி நல்ல சிறுகதைகளை தேடவும் அதை சக வாசகர்களை நோக்கி நகர்த்தவும்  செய்யும். . 

பெஅ வாசகர் வட்டம்

அந்த இருட்டறையில் அவன் அம்மணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தான். இடுப்பு வரைக்குமான உடம்பு நேர்க்கோட்டிலும் மேலுடம்பு முன்பக்கமாக வளைந்து , முதுகு மேலும் கூன் விழுந்து போயிருந்தது. அவனுடைய தலை  விளைந்த நெற்கதிரின் குனிவைப்போலிருந்தது. கால்களை அவன் அப்படியும் இப்படியுமாக எடுத்து வைத்தான். தொடைகளை முன்பக்கமாக வளைத்து அந்தரங்க உறுப்பை மறைக்க முயற்சித்தான். அவனுடைய இரு பக்கத் தொடை சப்பைகளும் உள்ளூரக் குழி விழுந்துபோயிருந்தன. வயிறு சுருக்கம் விழுந்துபோய் விலா எலும்புகள் அகடு, முகடுகளாக இருந்தன.   அந்தரங்க உறுப்பை மறைத்தாக வேண்டிய இரண்டு கைகளும் பின்பக்கம் ஒரு நீளக் கத்தல் துணியைக்கொண்டு இறுகக்கட்டப்பட்டிருந்தன. மொத்தத் துணியும் கைகளில் இறுக சுற்றப்பட்டிருந்ததால் அது பார்க்க பிரிமணைப் போலத் தெரிந்தன. அவனுடையக் கண்கள் ஒரு காவித்துண்டால் இறுகக்கட்டப்பட்டு பிடறிப்பக்கம் ஆட்டுக்கால் முடிச்சிட்டிருந்தார்கள். இரண்டு முடிச்சுகள் போக மீதத்துணி பூனை வாலினைப்போன்று தொங்கிக்கொண்டிருந்தது. ஒரு கல்லூரி மாணவனுக்குரிய மிடுக்கும், துடிப்பும் அவனிடமிருந்தது. நடுத்தரக் குடும்பத்திலிருந்து ஒரு பட...

சிறுகதைப் போட்டி

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் சரசு இராமசாமி அறக்கட்டளை இணைந்து நடத்தும் சிறுகதைப்போட்டி முதல் பரிசு ₹ 6000 இரண்டாம் பரிசு ₹ 4000 மூன்றாம் பரிசு ₹ 2000 ஆறுதல் பரிசு மூன்று பேருக்கு ₹ 1000 கடைசி தேதி ஏப்ரல் 30 முகவரி முனைவர் இரா. செல்வி C/O  திருமதி ரேணுகா நாகராஜ் 55, திரு.வி.க வீதி ஹோல் காலேஜ் பீளமேடு கோவை 641014 r.selvi1957@gmail.com
விக்கிபீடியா நடத்திய விக்கி கோப்பை போட்டியில் மூன்றாமிடம் பெற்றிருக்கும் கட்டுரையாளன்  தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக கண்காணிப்பாளர் ஜம்புலிங்கம்  அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
தூயன் - முகம் இவர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர். வயது 30. இவர் சிறுகதை எழுதத் தொடங்கி மூன்று வருடங்கள்தான் ஆகிறது. இவரது முன்மாதிரியான எழுத்தாளராக அசோகமித்ரனை கைக்காட்டுகிறார். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு இருமுகம். இந்நூலனை அவர் ‘ ஜெயமோகனுக்கு சமர்ப்பணம் ’ செய்திருக்கிறார். இவரது கதை பெரும்பாலும் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைகளையும், உணர்வுகளையும் பிரதிபலிக்கும்படியாக இருக்கிறது. ‘ முகம்’ என்கிற கதை மிக முக்கியமானது. பன்றி வளர்ப்பவர்களின் குடும்பங்களை மிக அருகிலிருந்து பார்த்து, கவனித்து, உணர்ந்து எழுதப்பட்டிருக்கும் கதையாக இருக்கிறது. பன்றி வளர்ப்பவர்களிடம் அவர் தோழமைக் கொண்டிருப்பதும், நெருங்கிப் பழகுவதும், பன்றி வளர்க்கும் இடம், அடைக்கும் இடம் இவற்றை அத்தனை நேர்த்தியாக படம் பிடித்திருக்கிறார். கதையில் பன்றியால் கதாப்பாத்திரத்தின் குடும்பத்தில் உயிரிழப்பு ஏற்பட வீட்டிற்கு வரும் பன்றிகளை ரகசியமாகப் பிடித்து கழுத்தை அறுத்து கொன்றுப்புதைக்கிறார். பன்றியை அவர் அவ்வாறு கொன்றுப் புதைப்பதற்கு அக்கதைப்பாத்திரம் நியாயமான காரணத்தையும் வலுவான உட்கிடக்கையும் கொண்டிருக்கிறது. ...
கலைச்செல்வி -  நெனப்பு  இன்றைய சிறுகதை ஊடகத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாக கால் ஊன்றிருக்கும் எழுத்தாளர் இவர். இவர் பெண்பால் எழுத்தாளர்கள் பெண்ணிய வாழ்வியல் கூறுகளை மட்டுமே ஆழ , அகலத்துடன் எழுதுவார்கள் என்கிற சூத்திரப் பின்னலை கத்தரிக்கும் படியான எழுத்து இவருடையது. எல்லாருக்குள்ளும் இருக்கும் பசியைப் போல எல்லாருக்குமான எழுத்து இவருடையது. மனிதர்கள் சந்திக்கும் அத்தனை உணர்வுகளையும் இவரது கதைகள் உரக்கப் பேசக்கூடியது. இவரது சமீப சிறுகதைத் தொகுப்பு ‘ இரவு’. அதிலொரு கதை நெனப்பு.  அண்ணன் தங்கை இருவருக்கிடையில் படரும் பாசம், இடையில் மெல்லிய விரிசல், இருவரின் தரப்பிலும் ஆழப்படியும் ஏக்கம், ஏதேனும் ஒரு தருணத்தில் இருவரும் ஒன்று சேர மாட்டோமா என்கிற ஏக்கத்துடன் இக்கதை தன் பரப்பை விரித்துச்செல்லும். இக்கதையை வாசிக்கையில் அவரவர் உடன்பிறப்புகள் ஒரு கணம் நினைவிற்கு வந்து ஆழ்மனதை தரைத்தட்டவே செய்யும்.  இக்கதையை வாசிக்கையில் எனக்கு கிழக்குச்சீமை திரைப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ஒரு பாடல்வரி நினைவிற்கு வந்தது. ‘ அணில் வால் மீசைக்கொண்ட அண்ணன் உன்னை விட்டு ; புலி வால் மீசை...

மன்னராட்சிக் கோரிய மீன்கள்

மீன்கள், ஜனநாயகத்தின் மீதிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டிருந்தன. குட்டிகள், வளரினங்கள், முட்டையிடும் மீன்கள் யாவும் தலைமையின் மீது அதிருப்தி கொண்டன. அக்கிணற்றில் மிகச்சிறிய மீனான நெத்திலி முதல் கட்லா, ரோகு, மிர்கால், வெள்ளிக்கெண்டை, புல்கெண்டை, சாதாக் கெண்டை,...என இருபதுக்கும் மேற்பட்ட மீனினங்கள் வாழ்ந்து வந்தன. அம்மீனினத்தில் பெரிய இனமாக புல் கெண்டை இருந்தது. அம்மீன் கூட்டத்திற்கு தலைவனாக இருந்தது. அம்மீனிற்கு எதிராகத்தான் மற்ற மீனினங்கள் தன் எதிர்ப்புகளைக் காட்டியிருந்தன. சிறு, பெரும் அலைகளை உருவாக்கி கிணற்றைக் கொந்தளிக்க வைத்தன. சிறிய மீன்கள் வாயை ‘ஆ...’வெனத் திறந்து வானத்தைப் பார்த்து செத்ததைப்போல காட்டி தன் அதிருப்திகளைக் காட்டின. நடுத்தர மீன்கள் வால் துடிப்புகளால் தண்ணீரை அடித்தும் பெரிய மீன்கள் தாவிக்குதிப்பதுமாக இருந்தன. இக்கூட்டத்திற்கு தலைவனாக இருக்கின்ற புல் கெண்டை கிணற்றின் அடியில் உயிர் வாழக்கூடியது. கிணற்றின் சகதிக்குள், துடிப்புகளைப் புதைத்து ஓய்வு எடுப்பவை. சகதி தரும் குளுமையும் அதன் கொழகொழுப்பும் அதற்கு இனிமைாக இருப்பவை. அம்மீன் தன் பிள்ளைக்குஞ்சுகளுடன் உல்லாசமாக...

நூல் விமர்சனம்

தமிழவனின் நாவல் இது. சரித்திரத்தில் படிந்த நிழல்கள். காலனிய அழகியலுக்கு எதிரான பின்காலனிய நாவல்.  ஒரு புனைவு நாடு தொகிமொலா.அரசன் பச்சை ராஜன். ராணி பாக்கியத்தாய். இவர்களை மையமாகக் கொண்டு நாவல் நகர்கிறது. முழுக்கவும் புனைவு. நாடு அற்றவர்கள், மொழி அற்றவர்கள் , ஒருவனை நாடு அற்றவனாக மாற்ற முனையும் வன்மம், ரஷ்யா உடைந்ததற்கு பிறகு ஒரு நாட்டினரின் கீழ் வந்த ஐ.நா மன்றம் என அனைத்யையும் இந்நாவல் தொட்டுச்செல்கிறது. நூலகம் எரிப்பு , பண்பாட்டு அரசியலில் கால் வைப்பது என இந்ராவல் பேசாத பொருள் இல்லை. எதிரிகளின்', 'வம்சத்தை', வேரறுத்தல்' இம்மூன்று பதங்களும் நாவலில் கவனிக்கும் படியாக இருக்கிறது. நாவல் முழுக்கவும் கிளைக்கதைகள். நாவலின் மையமான தொகிமொலா தமிழர்களின் நாடான இல்லாத ஒன்றை நினைவுப்படுத்துகிறது. நல்ல நாவல் எழுத்தாளரின் புனைவை புரிந்துக்கொள்ள முரண்டுப்பிடிக்க வேண்டியிருக்கிறது. '

சவப்பெட்டி

காக்கை பிப்ரவரி  இதழில் பிரசுரமாகியிருக்கும் சிறுகதை அப்பாவை மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்த நாட்கொண்டு இரு வேறு செய்திகள் எனக்கு வந்துகொண்டிருந்தன. அதில் முக்கியமானச் செய்தி அப்பாவின் ஆரம்பக்கால உதவியாளர் சேதுராமன் சொன்னச் செய்தியாக இருந்தது. அப்பா மீது வைத்திருந்த நன்மதிப்பின் பேரில் அவர் அந்த செய்தியைச் சொல்லியிருந்தார். அச்செய்தியைச் சொல்கையில் அவருடைய நா தழதழத்ததை விடவும் அச்செய்தியை உள்வாங்கிய என் ஒற்றைச் செவி நடுங்கிற்று. அவர் ஒரு கெஞ்சிய முன் கோரிக்கையுடன் அச்செய்தியை என்னிடம் பகிர்ந்துகொண்டார். விக்கல் எடுப்பதைப்போன்று வார்த்தைகளை உருட்டினார். ‘ தம்பி நான் சொன்னேனு மட்டும் யார்க்கிட்டேயும் சொல்லிடாதீங்க. நான் உயிரோடு இருக்க முடியாது. உன் அப்பா ஆஸ்பஸ்திரியில சேர்த்த மறுநாளே இறந்திட்டார்ப்பா. அதற்குப்பிறகும் உன் அண்ணன்கள் உன் அப்பாவிற்கு வைத்தியம் பார்த்திக்கிட்டிருக்கான்க. உனக்கு எதிராக என்னவோ சூழ்ச்சி நடக்குதப்பா....’ இதை அவர் சொல்லி முடிக்கையில் அவரது வார்த்தைகள் எனக்குள் கனத்தன. அப்பா இறந்துவிட்டார் என்கிற செய்தியை விடவும் இறந்ததற்கு பிறகும் உன் அண்ணன...

சிறுகதைப்போட்டி

சென்னை புரோபஸ் கிளப் கலைமகள்  இணைந்து நடித்தும் சிறுகதைப் போட்டி -2017 பரிசுகள் 10000,5000,3000 மூத்தக் குடிமக்களின் பிரச்சினைகளையொட்டி கதை எழுதப்பட்டிருக்க வேண்டும். கடைசி தேதி மே 1 2017 முகவரி கலைமகள் காரியாலயம் 1,சமஸ்கிருத கல்லூரித் தெரு மயிலாப்பூர் சென்னை 600004

ஒரு இலட்சம் பரிசு

சிறந்த நூல்களுக்கு ஒரு இலட்சம் பரிசு மரபுக்கவிதை, புதுக்கவிதை,கட்டுரை , சிறுகதை, நாவல், குழந்தை இலக்கியம் 3 படிகள் அனுப்ப வேண்டும். 2016 ஆம் ஆண்டு வெளிவந்த நூல்கள் மட்டும். கடைசி தேதி ஏப்ரல் 10 2017. கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் 420  E , மலர் காலனி அண்ணாநகர் சென்னை 600040
தமிழ்க் கவிதை நூல்களுக்கான போட்டி இரு படிகள் கடைசித்தேதி - பிப்ரவரி  10 கவிஞர் பே.இராஜேந்திரன் தபால் பெட்டி எண் 103 பாளையங்கோட்டை திருநெல்வேலி  627002

மில்லி கிராம் மாத்திரை

மனித மலத்தை மணக்க வைக்கும் மாத்திரையொன்று தன்னிடம் இருப்பதாகச் சொல்லிக்கொண்டு ஒருவர் வாசலில் நின்றுகொண்டிருந்தார். மலச்சிக்கலும், வாயுத்தொல்லையும் நீண்ட நாட்கொண்டு எனக்கு இருந்து வருவதை யாரோ ஒருவர் அவரிடம் சொல்லிருக்க வேணும். அல்லது நான் நடக்கையில் , உட்கார்ந்து எழுந்திருக்கையில் என் பின் வாசல் வழியே காற்று உடைபடுவதை அவர் கவனித்திருக்க வேணும். அல்லது ஏதோ ஒரு பொதுயிடத்தில் அவரது நாசியை அடைக்கும் படியாக என்னுடைய கரியமில வாயு வெளியேறியிருக்க வேணும்.... மலத்தை மணக்க வைக்கும் மாத்திரையுடன் வாசலில் நின்றுகொண்டிருந்தவர் முகத்தை ‘உம்’மென வைத்திருந்தார். இந்தக்காலத்திலும் இப்படியொரு மாத்திரை இருக்கிறதென்று தெரியாமல் ஏன்தான் வீதியெங்கும் மலத்தைக் கழித்து தெருக்களை நாறடித்து வைத்திருக்கிறீர்களோ.... எனச் சமூகத்தை நினைத்து கோபப்படும் மனிதராகத் தெரிந்தார். சண்டைக்கலை நடிகர் ஜெட்லியின் முகவெட்டும் உடல்வாகும் அவரிடமிருந்தது. சிவந்த உடம்பு, மீசை மழிக்கப்பட்ட உதடுகள். இமையும் புருவங்களும் மழுங்கிப்போயிருந்தன. தலையில் உயரமான தொப்பி அணிந்திருந்தார். ‘ பிசினஸ்...பிசினஸ்....ஒன்லி பிசினஸ்.....’ எனச்...