முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மன்னராட்சிக் கோரிய மீன்கள்

மீன்கள், ஜனநாயகத்தின் மீதிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டிருந்தன. குட்டிகள், வளரினங்கள், முட்டையிடும் மீன்கள் யாவும் தலைமையின் மீது அதிருப்தி கொண்டன. அக்கிணற்றில் மிகச்சிறிய மீனான நெத்திலி முதல் கட்லா, ரோகு, மிர்கால், வெள்ளிக்கெண்டை, புல்கெண்டை, சாதாக் கெண்டை,...என இருபதுக்கும் மேற்பட்ட மீனினங்கள் வாழ்ந்து வந்தன. அம்மீனினத்தில் பெரிய இனமாக புல் கெண்டை இருந்தது. அம்மீன் கூட்டத்திற்கு தலைவனாக இருந்தது. அம்மீனிற்கு எதிராகத்தான் மற்ற மீனினங்கள் தன் எதிர்ப்புகளைக் காட்டியிருந்தன. சிறு, பெரும் அலைகளை உருவாக்கி கிணற்றைக் கொந்தளிக்க வைத்தன. சிறிய மீன்கள் வாயை ‘ஆ...’வெனத் திறந்து வானத்தைப் பார்த்து செத்ததைப்போல காட்டி தன் அதிருப்திகளைக் காட்டின. நடுத்தர மீன்கள் வால் துடிப்புகளால் தண்ணீரை அடித்தும் பெரிய மீன்கள் தாவிக்குதிப்பதுமாக இருந்தன. இக்கூட்டத்திற்கு தலைவனாக இருக்கின்ற புல் கெண்டை கிணற்றின் அடியில் உயிர் வாழக்கூடியது. கிணற்றின் சகதிக்குள், துடிப்புகளைப் புதைத்து ஓய்வு எடுப்பவை. சகதி தரும் குளுமையும் அதன் கொழகொழுப்பும் அதற்கு இனிமைாக இருப்பவை. அம்மீன் தன் பிள்ளைக்குஞ்சுகளுடன் உல்லாசமாக...

நூல் விமர்சனம்

தமிழவனின் நாவல் இது. சரித்திரத்தில் படிந்த நிழல்கள். காலனிய அழகியலுக்கு எதிரான பின்காலனிய நாவல்.  ஒரு புனைவு நாடு தொகிமொலா.அரசன் பச்சை ராஜன். ராணி பாக்கியத்தாய். இவர்களை மையமாகக் கொண்டு நாவல் நகர்கிறது. முழுக்கவும் புனைவு. நாடு அற்றவர்கள், மொழி அற்றவர்கள் , ஒருவனை நாடு அற்றவனாக மாற்ற முனையும் வன்மம், ரஷ்யா உடைந்ததற்கு பிறகு ஒரு நாட்டினரின் கீழ் வந்த ஐ.நா மன்றம் என அனைத்யையும் இந்நாவல் தொட்டுச்செல்கிறது. நூலகம் எரிப்பு , பண்பாட்டு அரசியலில் கால் வைப்பது என இந்ராவல் பேசாத பொருள் இல்லை. எதிரிகளின்', 'வம்சத்தை', வேரறுத்தல்' இம்மூன்று பதங்களும் நாவலில் கவனிக்கும் படியாக இருக்கிறது. நாவல் முழுக்கவும் கிளைக்கதைகள். நாவலின் மையமான தொகிமொலா தமிழர்களின் நாடான இல்லாத ஒன்றை நினைவுப்படுத்துகிறது. நல்ல நாவல் எழுத்தாளரின் புனைவை புரிந்துக்கொள்ள முரண்டுப்பிடிக்க வேண்டியிருக்கிறது. '

சவப்பெட்டி

காக்கை பிப்ரவரி  இதழில் பிரசுரமாகியிருக்கும் சிறுகதை அப்பாவை மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்த நாட்கொண்டு இரு வேறு செய்திகள் எனக்கு வந்துகொண்டிருந்தன. அதில் முக்கியமானச் செய்தி அப்பாவின் ஆரம்பக்கால உதவியாளர் சேதுராமன் சொன்னச் செய்தியாக இருந்தது. அப்பா மீது வைத்திருந்த நன்மதிப்பின் பேரில் அவர் அந்த செய்தியைச் சொல்லியிருந்தார். அச்செய்தியைச் சொல்கையில் அவருடைய நா தழதழத்ததை விடவும் அச்செய்தியை உள்வாங்கிய என் ஒற்றைச் செவி நடுங்கிற்று. அவர் ஒரு கெஞ்சிய முன் கோரிக்கையுடன் அச்செய்தியை என்னிடம் பகிர்ந்துகொண்டார். விக்கல் எடுப்பதைப்போன்று வார்த்தைகளை உருட்டினார். ‘ தம்பி நான் சொன்னேனு மட்டும் யார்க்கிட்டேயும் சொல்லிடாதீங்க. நான் உயிரோடு இருக்க முடியாது. உன் அப்பா ஆஸ்பஸ்திரியில சேர்த்த மறுநாளே இறந்திட்டார்ப்பா. அதற்குப்பிறகும் உன் அண்ணன்கள் உன் அப்பாவிற்கு வைத்தியம் பார்த்திக்கிட்டிருக்கான்க. உனக்கு எதிராக என்னவோ சூழ்ச்சி நடக்குதப்பா....’ இதை அவர் சொல்லி முடிக்கையில் அவரது வார்த்தைகள் எனக்குள் கனத்தன. அப்பா இறந்துவிட்டார் என்கிற செய்தியை விடவும் இறந்ததற்கு பிறகும் உன் அண்ணன...

சிறுகதைப்போட்டி

சென்னை புரோபஸ் கிளப் கலைமகள்  இணைந்து நடித்தும் சிறுகதைப் போட்டி -2017 பரிசுகள் 10000,5000,3000 மூத்தக் குடிமக்களின் பிரச்சினைகளையொட்டி கதை எழுதப்பட்டிருக்க வேண்டும். கடைசி தேதி மே 1 2017 முகவரி கலைமகள் காரியாலயம் 1,சமஸ்கிருத கல்லூரித் தெரு மயிலாப்பூர் சென்னை 600004

ஒரு இலட்சம் பரிசு

சிறந்த நூல்களுக்கு ஒரு இலட்சம் பரிசு மரபுக்கவிதை, புதுக்கவிதை,கட்டுரை , சிறுகதை, நாவல், குழந்தை இலக்கியம் 3 படிகள் அனுப்ப வேண்டும். 2016 ஆம் ஆண்டு வெளிவந்த நூல்கள் மட்டும். கடைசி தேதி ஏப்ரல் 10 2017. கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் 420  E , மலர் காலனி அண்ணாநகர் சென்னை 600040
தமிழ்க் கவிதை நூல்களுக்கான போட்டி இரு படிகள் கடைசித்தேதி - பிப்ரவரி  10 கவிஞர் பே.இராஜேந்திரன் தபால் பெட்டி எண் 103 பாளையங்கோட்டை திருநெல்வேலி  627002

மில்லி கிராம் மாத்திரை

மனித மலத்தை மணக்க வைக்கும் மாத்திரையொன்று தன்னிடம் இருப்பதாகச் சொல்லிக்கொண்டு ஒருவர் வாசலில் நின்றுகொண்டிருந்தார். மலச்சிக்கலும், வாயுத்தொல்லையும் நீண்ட நாட்கொண்டு எனக்கு இருந்து வருவதை யாரோ ஒருவர் அவரிடம் சொல்லிருக்க வேணும். அல்லது நான் நடக்கையில் , உட்கார்ந்து எழுந்திருக்கையில் என் பின் வாசல் வழியே காற்று உடைபடுவதை அவர் கவனித்திருக்க வேணும். அல்லது ஏதோ ஒரு பொதுயிடத்தில் அவரது நாசியை அடைக்கும் படியாக என்னுடைய கரியமில வாயு வெளியேறியிருக்க வேணும்.... மலத்தை மணக்க வைக்கும் மாத்திரையுடன் வாசலில் நின்றுகொண்டிருந்தவர் முகத்தை ‘உம்’மென வைத்திருந்தார். இந்தக்காலத்திலும் இப்படியொரு மாத்திரை இருக்கிறதென்று தெரியாமல் ஏன்தான் வீதியெங்கும் மலத்தைக் கழித்து தெருக்களை நாறடித்து வைத்திருக்கிறீர்களோ.... எனச் சமூகத்தை நினைத்து கோபப்படும் மனிதராகத் தெரிந்தார். சண்டைக்கலை நடிகர் ஜெட்லியின் முகவெட்டும் உடல்வாகும் அவரிடமிருந்தது. சிவந்த உடம்பு, மீசை மழிக்கப்பட்ட உதடுகள். இமையும் புருவங்களும் மழுங்கிப்போயிருந்தன. தலையில் உயரமான தொப்பி அணிந்திருந்தார். ‘ பிசினஸ்...பிசினஸ்....ஒன்லி பிசினஸ்.....’ எனச்...
நூல் போட்டி - மொத்தப்பரிசு 50000 ரூபாய். கவிதை , கட்டுரை , நாவல் , சிறுகதை நூல்கள் வரவேற்கப்படுகின்றன 2013 , 2014 , 2015 , 2016 ஆண்டுகளில் வெளிவந்த நூல்கள். முகவரி சாலோம் அறக்கட்டளை 350 , ஆஜியார் நகர் புதுப்பட்டினம் கல்பாக்கம்        603102 கடைசி தேதி 20.01.2017 நன்றி (நமது உரத்த சிந்தனை மாத இதழ்)
ஆஸ்திரேலியா அக்னிக்குஞ்சு இதழ் நடத்திய சிறுகதைப்போட்டியில் ' கானல் நீர் ' என்கிற சிறுகதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்திருக்கிறது. இதழுக்கும்  ஆசிரியர் குழுவினருக்கும் நன்றி

எஸ்.பொ குறுநாவல் போட்டி முடிவு

அக்னிக்குஞ்சு இணைய இதழும் எழுத்தாளர் எஸ்.பொ நினைவாக நடத்தப்பட்ட குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றவர்கள். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

கவிதைப் போட்டி

கவிதைப் போட்டி பரிசுகள் 2000 ,1000 ரூபாய் 24 வரிகளுக்குள் முகவரி தமிழ்நிலவன் செயலர் 7 ஞானகிரீசுவரன் பேட்டை கருங்குழி காஞ்சிபுரம் மாவட்டம் 603303

சிறுகதை லத்தி

                லத்தி இரண்டு பூதங்கள் நெருங்குவதைப்போலதான் அந்த நான்கு கால்களும் என்னை நெருங்கியிருந்தன. நான் பூப்பெய்த அன்றைய தினம் ஒடுங்கி உட்கார்ந்ததைப்போல கால்,தொடைகள் மார்போடு அணைய கால்களை இறுகக் கட்டிக்கொண்டு சுவற்றில் ஒடுங்கி உட்கார்ந்திருந்தேன். ‘டக்,..டுக்....டக்...டுக்....’ -  பூட்ஸ்களின் அரவம். ஒரு கையில் டார்ச் லைட் இருந்தது. அதன் மண்டை போலீஸ்க்கே உரித்தான தீர்க்கமான முழியைப் போலிருந்தது. அந்த டார்ச் ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு மாறி இன்னொரு கைக்கு மாறியது. அதை வாங்கியக் கை வெளிச்சத்தை என் மீது அடிப்பதும் நிறுத்துவதுமாக இருந்தது. ஈட்டி பாய்வதைப்போல பாய்ந்த வெளிச்சத்தின் ஊடே அந்த இரண்டு உருவங்களையும் பார்த்தேன். நான்கு பூட்ஸ் கால்களும் என்னை மிக அருகில் நெருங்கியிருந்தன. பூட்ஸ்களின் நிறம் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் வெளிர்த்துபோன அப்பாவிகளின்  தோல் நிறத்தில் இருந்தன. எனக்கும் பூட்ஸ் கால்களுக்குமிடையே இரும்புக்கம்பிகளான கிறில் கேட் இருந்தது. பெண்களுக்கு கன்னித்திரையைப்போல விசாரணைக் கைதிகளுக்கு இரும்புக் கேட். விச...

ஹைக்கூ நூல் போட்டி -2017

நீலநிலா இதழ்,   விருதுநகர், கந்தகப்பூக்கள்  இணைந்து நடத்தும் ஹைக்கூ நூல் போட்டி -  2017 நூல் இரண்டு படிகள் அனுப்ப வேண்டும் நூல் இல்லாதவர்கள்  ஒளிநகல் பிரதி அனுப்பலாம் கடைசி நாள் 01.07.2017 முகவரி நீலநிலா இதழ் குழுமம் 23, க.யி.ச கிட்டங்கித் தெரு விருதுநகர் 626001 ( நன்றி - இனிய நந்தவனம்)

2016 ஆம் ஆண்டு நான்....

 2016 ஆம்  ஆண்டு இலக்கியத்துறையில் நான்.. இவ்வாண்டின் தொடக்கத்தில் ‘ லெக்கிங்ஸ்’ என்கிற சிறுகதை வண்ணக்கதிரில் பிரசுரமானது. கடைசியாக  ‘ ம்...’ கதைசொல்லி மாத இதழில். இவ்வாண்டில் பிரசுரமான மொத்தச் சிறுகதைகள்   - 19 கட்டுரைகள்   -      5 நூல் வெளியீடு - 1 ஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை ( சிறுகதைத் தொகுப்பு) - இருவாட்சி பதிப்பகம். பரிசுகள்  பெற்ற விபரம் 1. ஆஸ்திரேலியா- அக்னிக்குஞ்சு இணைய இதழ் நடத்திய சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு 2. வெண்மணி அறக்கட்டளை நடத்திய சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு ( பரிசு இதுநாள் வரைக்கும் வழங்கப்படவில்லை) 3. அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு 4. டி.வி.ஆர் நினைவுச் சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு 5. காரைக்குடி உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய     சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு 6. வானதி சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு 7. லண்டன் புதினம் சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு திற - சிறுகதைத் தொகுப்பிற்காக... 8. கம்பம் பாரதி இலக்கியப் பேரவையின...

போடோ மொழி சிறுகதை

போடோ-கக்சாரிசு என்று அழைக்கப்படும் போடோ மொழி அசாமில் பிரம்புத்திரா பள்ளத்தாக்கு பகுதிகளில் பேசக்கூடிய பழங்குடியின மொழி. அரிதான மக்களால் பேசப்பட்டு வந்த இம்மொழி பேசும் மக்களால் மொழியின் அவசியத்தை உணர்ந்து எழுத்து மொழியாகவும் , தொடக்கக்கல்வி மொழியாகவும் கடைப்பிடித்து பத்து ஆண்டுகளாக உயர்க்கல்வி மொழியாகவும் விளங்கிறது. இம்மொழியின் முதல்  இலக்கிய  இதழ் 1955 ஆம் ஆண்டு சதீசு சந்திர பசுமதாரி என்பவரால் கொண்டுவந்த போடோ என்கிற இதழ்தான். இம்மொழியின் முதல் சிறுகதை 1930 ஆம் ஆண்டு இசான் முசாகாரி என்பவரால் எழுதப்பட்டிருக்கிறது. அக்கதை ' அபரி   '. இக்கதை அதே ஆண்டு காதார்கிலா என்கிற இதழில் பிரசுரமாகியிருக்கிறது.        அபரி பதினெட்டு வயதுடைய பெண்.அவளுக்கு வரன் தேடுகிறான் சகோதரன் உலி. அபரிக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை.  மாப்பிள்ளை முதுகில் கூன் விழுந்து போய் பார்க்க கிழவன் மாதிரி தெரிகிறான். மாப்பிள்ளை பிடிக்கவில்லை  என்கிற தகவலை அவள் சகோதரனிடம் சொல்கிறாள். உலி , ' நீ ஊனம் என்பதால் உனக்கு இப்படியாகப்பட்ட மாப்பிள்ளைதான் கிடைப்பான் ' என்கிறான். அவனை மணக...