முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறுகதை காதல் படுத்தும் பாடு


     
‘ நிர்மல் பேசுறேன்....’
‘................’
‘ உங்க பொண்ணோட லவ்வர் ’
‘ ........................’
‘ தெரியாத மாதிரி கேட்குறீங்க....’
‘ .........................’
‘ உங்க பொண்ண ஒரு நாள் பைக்ல ஏத்திக்கிட்டு வந்தேன்ல...அந்த நிர்மல்.....’
‘.............................’
‘ உங்க பொண்ணு யார் பைக்லயும் ஏறமாட்டா....ஆனா என் பைக்ல ஏறுவா.....’
‘.................’
‘எப்பொழுதாவது ஏறுகிறவள் இல்ல...எப்பொழுதும் ஏறுகிறவள்..’
‘....................’
‘ அவள் என் பைக்ல எப்படி உட்கார்வாள்னு சொல்லட்டா....’
‘...............’
‘ இல்ல சொல்றேன்.....ரெண்டுப்பக்கமும் கால்களப் போட்டுக்கிட்டு என்னை இருக்க கட்டிப்பிடிச்சிக்கிறுவாள்.....’
‘..................’
‘ ஹலோ.....வார்த்தைய அளந்துப்பேசுங்க. அவ யார் பைக்லயும் ஏறுனதில்லைனு சொன்னீங்களே...அதுக்கு விளக்கிக்கிட்டிருக்கேன்.....’
‘ ..........................’
‘ இம்....அப்படி வாங்க வழிக்கு....அவக்கிட்ட நான் பேசணும்...’
‘.......................’
‘ என்னது அவக்கிட்ட நான் ஏன் பேசணுமா.....ஹலோ.....அவளை நான் லவ் பண்றேன்...’
‘....................’
‘ அவள் என்னை லவ் பண்றாள்.....’
‘..............................’
‘ அவ என்னை லவ் பண்றாளா இல்லையானு அவளக் கேளுங்க.....’
 ‘....................................’
‘ அவள் எங்கே....?’
‘...................‘
‘ காலேஜ்க்கு போயிருக்காளா....? இல்ல...எவன் கூடவாவது சுத்தப்போயிருக்காளா.....?’
‘ .......................’
 ‘ ஏய்....ஏய்....மரியாதையாப்பேசு.......’
‘.....................’
‘ இப்படி பேசுற நீங்க. உங்கப்பொண்ண என் கூட ஊர்ச்சுத்தாமப் பார்த்திருந்திருக்கணும்....’
 ‘.................’
‘ அதான் சொல்றேன்ல. உன் பொண்ணு வந்ததும் கேட்டுப்பாருனு.....’
‘........................’
‘ இப்படியெல்லாம் நீங்க பேசக்கூடாது. நான் டென்த்திலிருந்து அவள லவ் பண்ணிக்கிட்டிருக்கேன்’
‘........................’
‘ கேள்ஸ் ஸ்கூல்ல படிச்சா லவ் பண்ணக்கூடாதுனு இருக்கா என்ன...?  நான் கூடதான் பாய்ஸ் ஸ்கூல்ல படிச்சேன். உன் பொண்ணு எப்படி என்னை லவ் பண்ணுணாளாம்.....’
‘.........’
‘ என் பேரு நிர்மல்...என்னைப்பத்தி உங்கக்கிட்ட நிறையத் தடவை சொல்லிருக்காள்....’
‘...........................’
‘ அவள்தான் சொன்னாள்...’
‘.......................’
‘ ஏ அப்பன், அம்மா யாருனு உங்களுக்குத் தெரியவேண்டியதில்ல....’
‘.........................’
‘ நான் ஏன் உங்கள  மிரட்டப்போறேன்....’
‘......................’
‘ எனக்கு என்  லவ்வர் வேணும்......’
‘ ...........................’
‘ ஏ என்ன விளையாட்டா.....அவளுக்கு பின்னே நாய் போல லோலோனு அழைஞ்சிருக்கேன். அவளுக்கு பூ.....பொட்டு,...செருப்பு..,வாங்கிக்கொடுத்திருக்கேன்.....’
‘...................’
‘ஹலோ....என்ன விளையாடுறீங்களா.....அவளுக்கு நான் உள்ளாடை வரைக்கும் வாங்கிக்கொடுத்திருக்கேன்....’
‘..........................’
‘ நா ஒன்னும் அசிங்கமாப் பேசல. நீங்கதான் பேசுறீங்க....?’
‘.................’
‘ ஹலோ....அளந்து பேசுங்க.. நாளைக்கு உங்க வீட்டுக்கு வரப்போகிற மருமகன் நான்...’
‘ ........................’
‘ உங்க சொத்து பத்தெல்லாம் என் கால் தூசிக்கு ஆகாது. உங்க சொத்துகள வச்சிக்கிட்டு நீங்க கட்டிக்கிட்டு அழுங்க. எனக்கு என் லவ்வர் வேணும்....’
‘ .........................’
‘ நீங்க முதல்ல ஒரு வயசு பையன்கிட்ட எப்படி பேசணுமோ அப்படிப்பேசுங்க.’
‘ ......................’
‘நான் என்ன அசிங்கமாப்பேசுறேன்...! வாங்கிக்கொடுத்ததச் சொன்னா ரோசம் வருதாக்கும்....’
‘.................’
‘ எனக்கு அவ வேணும்.....’
‘...........................’
‘ எனக்கு அவள் கிடைக்கலைன்னா நடக்குறதே வேற......’
‘.......................’
‘ என்ன செய்வேனா.....! சொல்லட்டா......?’
‘...................’
‘நானும் அவளும் சேர்ந்து எடுத்துக்கிட்ட  ஃபோட்டோவ...’
‘....................’
‘ நான் என்ன கீழ்த்தரமானவனு நினைச்சிட்டீங்களா.....? நான் ஏன்க உங்க மகளை மார்பிங்க் பண்ணனும்....ஏன் பண்ணனுங்கிறேன்....’
‘.........................’
‘நாங்க சேர்ந்து போட்டோ எடுத்துக்கிட்ட ஸ்டுடியோவைச் சொல்லட்டா.....’
‘..............’
‘நான் அவளும் சினிமாத் தியேட்டர்ல செஃல்பி எடுத்துக்கிட்டது இருக்கு. அனுப்பி வைக்கட்டா..?’
‘ ..................................’
‘ போ....நல்லப்போ.....’
‘.........................’
‘தட்டுவான்க...தட்டுவான்க.....போலீஸ்க்கும் சட்டம் தெரியும்....’
 ‘....................................’
‘ என்ன மிரட்டுறீங்களா....?’
‘.......................’
‘போலீஸ்க்கு போறதுன்னா....போ....பெட்டிசன் கொடு....அவளும் நான் ஒரு லாட்ஜ்ல தங்கியிருந்தப்ப அரை நிர்வாணத்தில எடுத்துக்கிட்ட ஃபோட்டோ இருக்கு. அதைக் காட்டுறேன்...போலீஸ்காரங்க எப்படி பார்ப்பாங்கன்னு தெரியும்ல....ஓசியில ப்ளூ ப்ளீம் பார்ப்பாங்க......’
‘.......’
‘என்னது நான் மோசடி பேர்வழியா.....? அவளுக்கு எங்கெல்லாம் மச்சம் இருக்குதுனு வரைக்கும் எனக்குத் தெரியும்....சொல்லட்டா.....?’
‘..................’
‘எத்தனை இருக்குனு சொல்லட்டா...?’
‘..................’
‘இப்படியெல்லாம் நீங்க கேள்வி கேட்கிற நிறுத்துங்க....’
‘................’
‘ நீங்க பேசாதீங்க’
‘ .............’
‘ போட்டோக்கள பேஸ்புக்கல போடுவேன்....’
‘.....................’
‘வாட்ஸ்அப்பில அனுப்புவேன். அனுப்பினால் என்ன ஆகுமெனத் தெரியும்ல.....’
‘...........................’
‘இத்தன நாளு அவளை அழைச்சிக்கிட்டு திரிஞ்சது நானு. எத்தனைக் கோயிலு, எத்தனை சினிமாத் தியேட்டரு, எத்தனை ஹோட்டல், எத்தனை லாட்ஜ்....’
‘...................’
‘இப்ப நீங்க அவளுக்கு வேற மாப்பிள பார்த்தா நான் விட்டுடுவேனா....?’
‘.........................’
‘ நீங்க மாப்பிளை பார்த்திருக்கீங்க. ’
‘..............’
‘அவதான் என்னக்கிட்ட சொன்னாள்....’
‘.................’
‘மாமன் மகனாம்.....சௌதியில இருக்கானாம்.....’
‘...........................’
‘ இந்த தாய்க்காரிகளே இப்படிதான்...’
‘........................................’
‘என்ன பம்முறீங்க. நான் யார்னு தெரியும்ல....அவளுக்காக நான் உயிரையும் கொடுப்பேன்....’
‘ ..................’
‘தேவைப்பட்டால் உயிரையும் எடுப்பேன்....’
‘......’.
‘மேரேஜ்ஜ நடத்த விடமாட்டேன்.....’
‘.............................’
‘அவதான் சொன்னாள். எனக்கு மாப்பிளை பார்த்திடாங்க....என்னை மறந்திடுங்கனு’
‘..................................’
‘நீங்க அவளுக்கு மாப்பிளை பார்த்திருக்கீங்க.....மறைக்கிறீங்க......’
‘.............................’
‘இந்த பொய் சத்தியம் என்னக்கிட்ட ஆகாது.....’
‘..................’
‘அழுதா விட்டுறுவேனாக்கும்.......’
‘...............’
‘இல்ல.....பொய் சொல்றீங்க......?’
‘...............................’
‘ கல்யாணத்த நடத்த விடமாட்டேன்......’
‘...........................’
‘ வினோதினி கதை தெரியும்ல.....?’
‘......................’
‘ முகத்தில ஆசிட் அடிப்பேன்....’
‘.........................’
‘நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேசன்ல சுவாதிக்கு ஏற்பட்ட கதி உன் மகளுக்கு ஆகும்....’
 ‘...............................’
‘ நான் ஆம்பளைடீ...’
‘..................’
‘ நான் ஆம்பளைங்கிறதக் காட்டுவேன்....’
‘..................’.
‘ எனக்கு அவள் வேணும்......’
‘.........................’
‘ என்னது செருப்பால அடிப்பீயா......’
‘.......................’
‘ ஹலோ ஹலோ....வயசுக்கு தகுந்த மாதிரி பேசுங்க....’
‘...........................’
‘ உன் மகள நீ பெத்தது மாதிரிதான் என்னைய ஏ அம்மா பெத்திருப்பா.....’
‘..................................’
‘ உன்ன மாதிரியில்ல ஏ அம்மா.....’
‘............................’
‘ நான் ஒரு அப்பனுக்கத்தான் பொறந்தேனா...இல்ல ஊர் அப்பன்களுக்கு பொறந்தேனாங்கிறது உன் மகள பொண்ணு அழைக்க வாற அன்னைக்குத் தெரியும்.....’
‘.........................’
‘ தூக்குலத் தொங்குவேன்.....’
‘................................’
‘ சும்மா தொங்க மாட்டேன். உன் மகளோட நான் எடுத்துக்கிட்ட அத்தனை போட்டோக்களையும் ஆயிரம் பிரிண்ட் எடுத்து தெருவெங்கும் வீசிட்டு தொங்குவேன்....’
‘....................................’
‘மார்ஃபிங் செய்து வாட்ஸ் அப்ல அனுப்புவேன்....’
‘........................’
‘ நான் ஏன் உன்ன மிரட்டணும்.....’
‘........................’
‘ என்னது பணமா.....? ’
‘................................’
‘உங்க பணத்தைக் கொண்டுப்போய் குப்பைத் தொட்டியில வீசுங்க.. எனக்கு என் லவ்வர்தான் வேணும்......’
‘...........................’
‘திரும்பத் திரும்ப அவள் அப்படிப்பட்டவள்னு சொல்லாதீங்க....’
‘..................................’
‘ அவ என் லவ்வர்’
‘....................................’
‘ இன்னும் சரியா சொல்லட்டா.......?’
‘................................’
‘ அவ என் மனைவி...............’
‘........................................’
‘உண்மையச் சொன்னா கோபம் பொத்துக்கிட்டு வருதாக்கும்.....’
‘...............................’
‘அவ வயித்துல வளர்ற குழந்தை எனக்கு வேணும்...................’
‘ ...................’
‘அசிங்கமா ஒன்னும் நான் பேசல. உண்மைய சொல்றேன்....’
‘..............................’
‘நீங்க அழுகற மாதிரிதான். எனக்கும் அழுகை வருது..... நிம்மதியாத் தூங்கி ஒரு மாசம் ஆகுது...’
‘...........................’
‘அதையேத்தான் நானும் கேட்கிறேன்.. என்க்கிட்ட என் லவ்வர கொடுத்திரூங்க.....நாங்க எங்கேயாவது போயிடுறோம்.....’
‘..................’
‘எனக்கு என் லவ்வர் வேணும்..அவ்வளவுதான்....’
‘.......................’
‘நீங்க சாகுறதுன்னா சாகுங்க. எனக்கு என் லவ்வர கொடுத்திட்டு செத்துப்போங்க.....’
 ‘.......................’
‘ஹலோ....உங்க உயிரப்பத்தி நான் ஏன் கவலைப்படணும்.....’
‘.......................’
‘வேணும்....’
‘ .............................’
‘அவள் காலேஜ் போகுறத நிறுத்துங்க. நிறுத்தாம போங்க எனக்கு அது தேவையில்ல. எனக்குத் தேவை அவளோட கல்யாணத்த நிறுத்தணும்.....’
‘.......................’
‘ நீங்க மாப்பிளை பார்த்திருக்கீங்க.....’
‘.............................’
‘ நிச்சயத்தார்த்தம் பண்ணிருக்கீங்க......’
‘.............................’
‘பத்திரிக்கை அடிக்க கொடுத்திருக்கீங்க....’
‘.................................’
‘அப்ப நான் என்ன பொய் சொல்றேன்கிறீங்களா........?’
‘..............................’
‘ நாளைக்குள்ள அவ என்னக்கிட்ட பேசணும்....’
‘..................’
‘போன் பண்ணி கல்யாணத்த நிறுத்தியாச்சுனு சொல்லணும்.....’
‘....................’
‘நான் ஜெயில்க்கு போனாலும் பரவாயில்ல. எனக்கு தூக்குத் தண்டனை கிடைச்சாலும் நான் கவலைப்படப்போறதில்ல. எனக்கு அவள்  கிடைக்கலைன்னா அவளும் நானும் சேர்ந்து பிடிச்ச போட்டோக்கள அவளோட பேஸ் புக்கல போடுவேன். அவள மார்பிங்க் பண்ணி வாட்ஸ்அப்பல அனுப்புவேன்....’
‘.......................’
‘அது மட்டுமில்ல. உங்களோட போட்டோக்களையும் போடுவேன்...’
‘...................’
‘ உங்க மொபைல் நம்பரையும் போடுவேன்....’
‘....................................’
‘ ஏ...ஏ....ஒரு தாய் மாதிரியா நீ பேசுற...’
‘.......................’
ஹலோ....ஹலோ.....வார்த்தைய அளந்துப்பேசுங்க....’
‘......................’
‘ அவள் எனக்கு மனைவியாகமாட்டாள்னா வேறு யாரு நீ ஆகுறீயா.....?’
‘..................’
‘ ஏய்......ஏய்......’
‘.......................’
‘ஏய்....வார்த்தைய அளந்துப்பேசு கேட்க முடியல....’
‘...............’
‘ அடிப்பே...அடிப்பே.......’
‘..........................’
‘ இங்கே வா...நான் அறுக்கிறேன்......’
‘.................’
‘ நீந்தான் பாதியில போவ.....’
‘...................’
‘ உனக்குத்தான் கழிச்ச வரும்.....’
‘...............’
‘ அது உங்க புத்தி என் புத்தியில்ல......’
‘....................’
‘நீ சொல்ற குடும்பம் உங்க குடும்பம். எங்க குடும்பம் இல்ல...’
‘......................’
இந்தாப்பாரு....நான் சொல்றதக்கேளு......’
‘........................’
‘ வேணாம்.......’
‘..................................’
‘ சொல்லிட்டேன்’
‘.........................’
‘ இச்சீ....நாயி.....’
‘..................’
‘கர்மம்....கர்மம்......’
‘....................’
‘ வார்த்தைய அளந்து பேசு...’
‘.........................’
‘ அடிப்பே...அடிப்பே....’
‘ .......................’
‘ ஏய்....பேஸ்புக்ல அனுப்பிருவேன்......’
‘........................’
‘ வாட்ஸ்அப்லயும் அனுப்புவேன்....’
‘..............’
‘ கடைசியா ஒன்னு சொல்றேன். கேட்டுக்கோ....’
‘.....................................’
       அழைப்பு துண்டித்துக்கொண்டது.
       அவன் தொடு திரையிலிருந்து எண்ணை எடுத்து மறு அழைப்பு கொடுக்க திரையைத் தொட்டான்.  கண் முன்னே எண்கள் சிவப்பு எழுத்துருக்களில் விரிந்து நின்றது. அதைப்பார்த்ததும் அவனுக்குள் ‘திக்’ கென இருந்தது. அழைத்திருந்த எண்ணைத் திரும்பத்திரும்பப் பார்த்தான். பத்து இலக்க எண்ணின் கடைசி எண் ‘ஐந்து’க்கு பதில் ‘எட்டு’ என பதிவாகியிருந்தது.


              

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...

மதினிமார்கள் கதை

கோணங்கி எழுதிய சிறுகதைகளில் மதினிமார்கள் கதை பரவலான கவனிப்பைப் பெற்றது. அக்கதையை  இன்றைய தினம் வாசித்தேன். சாத்தூரையொட்டிய நென்மேனி மேட்டுப்பட்டியில்  வாழும் பெண்கள் செம்பகத்திற்கு மதினிகளாக இருக்கிறார்கள். அவனது மூக்கில் சின்ன வயதில் அணிவித்த செம்புகம்பியால் அவன் செம்புகோம் என கேலியாகவும் செல்லமாகவும் அழைக்கப்படுகிறான். அவனை வேலைக்காரனாக , எடுபிடி ஆளாக,... சோறுப்போட்டு ஒரு ஊரே வளர்க்கிறது.  ஆவுடத்தங்க மதினி சுப்பு மதினி காளியம்மா மதினி அமராவதி மதினி குருவு மதினி மாணிக்க மதினி என மதினிமார்களுடன் வளர்ந்த செம்பகம் வெளியூரிலிருந்து  அக்கிராமத்திற்கு செல்கையில் அவ்வூர் எப்படியாக இருக்கிறது என்பதுதான் கதை சொல்லவரும் செய்தி.  இருண்ட தார் விரிப்பின் ஓரங்களில் உருவமே மாறிப்போய் - என்கிற முடிவுப்பத்தியால் கிராமம் அடைந்த பரிணாமத்தைக் காட்டுகிறார். முதிர்ந்த வயதுடைய பெரியாள் உருமியைத் தேய்க்கிற தேய்ப்பில் வருகிற அமுத்தலான ஊமைக்குரல் அடிநெஞ்சுக்குள் இறங்கி விம்மியது என்கிற இடம் துக்கத்தை நனைக்கும் வரி. பனையிலிருந்து கிடைக்கும் பொருளில் ஒன்றாக தவுண் அ...

அமைதி,விசாரணை நடந்துகொண்டிருக்கிறது

சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.              *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’ நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின. கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீ...