முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அசோகமித்ரனின்‘ பிரயாணம்’

சாகாத நாக்குகள் - 10 பகுதியில் அசோகமித்ரனின் ‘ பிரயாணம்’ கதையை நானும் வாசித்திருக்கிறேன். முதலில் எனக்கு அக்கதை சொல்ல வரும் செய்தி சரியாகப் பிடிபடவில்லை. பிரபலமான எழுத்தாளர் எழுதிய கதையாயிருச்சே...என்று அக்கதையை திரும்பத்திரும்ப வாசித்தேன். அக்கதையை நான் புரிந்துகொண்ட விதம் இப்படியாக இருந்தது.குரு- சிஷ்யன் இருவருக்கும் இடையேயான நெருக்கத்தை பரிசோதிக்கும் கதையாக இக்கதை எனக்குப்பட்டது.   
       இக்கதையில் குரு தன் சீடனுக்கு என்ன கற்றுக்கொடுக்கிறார். எத்தனை ஆண்டுகள் கற்றுக்கொடுக்கிறார். அவனை எப்படியாக பாவித்து கற்றுக்கொடுக்கிறார் என்கிற காட்சி கதையில் இடம் பெற வில்லை. ஆனால் இக்கதை சொல்லவரும் செய்திக்கு இருவருக்குமிடையேயான நெருக்கம், காலம் வேண்டியதில்லை என எழுத்தாளர் அசோகமித்ரன் நினைத்திருக்கலாம்.
       நான் கதையில் இடம்பெறும் குரு  துரோணாச்சார்யார் என்றும், சீடனை ஏகலைவனாகவும் பாவித்துப்பார்த்தேன்.
       கதைப்படி, சீடன் தன் குருவை மலையிலிருந்து சமவெளிப்பகுதிக்கு கொண்டு வருகிறான். குரு உயிரோடு இருக்கிறாரா...இல்லை இறந்துவிட்டாரா என்பது கதையை வாசிப்பவர்களின் புரிதலைப்பொருத்ததாக இருக்கிறது. குருவை கடைசி இரண்டு ஆசையில் ஏதேனும் ஒரு ஆசையையாவது நிவர்த்தி செய்திட வேண்டும் என்கிற வேட்கையோடுதான் குருவை அவன் சமதளப்பகுதிக்கு கொண்டுவருகிறான்.
       குருவை ஓநாய்கள் வேட்டையாடப்பார்க்கிறது. இந்த இடத்தில் வாசகர்கள் கவனிக்க வேண்டும். ஓநாய்கள் சீடனை ஒன்றும் செய்யவில்லை. குருவைதான் வேட்டையாடப்பார்க்கின்றன. இராமாயண, மகாபாரதம் காலத்தோடு ஒட்டி இக்கதையைப் பார்த்தோமானால் இந்த ஓநாய் வேட்டை குரு சீடனை சோதிக்கும் பொருட்டு அவர் நடத்தும் திருவிளையாடலாகத்தான் பார்க்க வேண்டும்.
       சீடன் குருவை மீட்க ஓநாய்களுடன் சண்டைப்பிடிக்கிறான். இந்த இடத்தில் மிஷ்கின் திரைபடம் நினைவிற்கு வந்தாக வேண்டும். அப்படத்தில் ஒரு ஆடு மெல்ல ஓநாயாக மாறுவதைப்போல சீடன் மெல்ல ஓநாயாக மாறி அவற்றுடன் சண்டைப்பிடிக்கிறான்.
       ஓநாயுடனான போராட்டத்தில் சீடன் சோர்ந்துவிட ஓநாய்க்கூட்டம் தன் குருவை இழுத்துச்செல்கிறது. அந்த ஓநாய்கள் நினைத்திருந்தால் சீடனையும் வேட்டையாடி இருக்கலாம். ஆனால் அது அப்படி செய்யவில்லை. ஓநாய்கள் குருவின் குடல்களை பிளந்து தின்றுவிட்டிருக்கிறது. அவரது தலையையும் துண்டித்து விடுகிறது.
       சீடன் மயக்கம் தெளிந்து குருவைத் தேடுகிறான். குரு வயிறு பிளக்கப்பட்டு இறந்திருக்கிறார். அவரது தலை ஓநாயால் துண்டிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு ஓநாயின் கால் அதன் தோள்பட்டையோடு பிய்த்து எடுக்கப்பட்டு குருவின் கைப்பிடியில் இருக்கிறது. இத்துடன் கதை முடிகிறது.
       ஆனால் கதை மீதான விமர்சனம் இதற்குப்பிறகுதான் தொடர்கிறது. சீடன் தன் குரு இறந்துவிட்டதாக நினைத்து அவரது ஆசையை நினைவாக்க ஓநாயுடன் சண்டைப்பிடிக்கிறான். ஆனால் குரு உயிருடன் இருந்து தன் சீடன் தனக்காக சண்டைப்பிடிப்பதை உள்ளூர கண்டு ரசித்திருக்கிறார். தன்னை கடித்துக்கொல்கிற ஒரு ஓநாயின் காலைப் பிய்த்தெடுக்கும் அளவிற்கு அவரிடம் பலம் இருந்திருக்கிறது. ஆனால் மயக்கமுற்ற சீடனை வலுவூட்ட அவரிடம் பலம் இல்லை. பலம் இல்லாமல் இல்லை. மனது இல்லை.
       குரு துகில் கொள்கையில் சீடன் அவருக்கான பாதுகாப்பில் முழுமையாக தன்னை அர்ப்பணிக்க வேண்டும். சீடனால் முடியாத பொழுது குரு பிணமாக இருந்தாலும் உயிர்ப்பெற்று வந்து ஓநாயின் ஒரு கால் சப்பையை பிய்த்து எடுத்து சீடனுக்கு வியப்பு பாடம் கற்பிப்பார்...என்ன கொடுமையான பாடமய்யா இது!
       குருவின் உயிரைக் காக்கும் பொருட்டு ஓநாய்களிடம் ஓநாயாக மாறி சண்டைப்பிடித்த தன் சீடனுக்கு ஆறுதல் சொல்லாத குரு , சீடன் மயக்கத்தில் ஆழ்ந்து மீண்டு வருகையில் அவனுக்கு பாடம் கற்பிக்கிறார். சீடர்கள் குருக்களைத் தாங்க வேண்டும். அவர்கள் கேட்கும் கட்டை விரல்களைக் கொடுக்க வேண்டும். குருக்கள் சீடனின் மடியில் படுத்து தூங்குவார். சீடனின் தொடையை வண்டு குடையும். குரு தூக்கம் களையாமல் இருக்க சீடன் வண்டுக்குடையும் வலியைத் தாங்கிக்கொள்ள வேண்டும். இத்தனை வலிகளையும் தாங்கி ஒரு சீடன் அவனது சொந்த முயற்சியால் முதன்மையான மாணவனாக வெளிப்படும்பொழுது குரு கொஞ்சமும் வெட்கப்படாமல் சொல்வார் ‘ இவன் என்னுடைய சீடன். இவனை சோதிக்கவே நான் இந்த திருவிளையாடல் நடத்தினேன்’ . என்ன கருமாந்திரம் பிடித்த சோதனையடா அது.

       இக்கதையில் குரு யார்...சீடன் யார்..என்பதைப் புரிந்துக்கொள்ளமுடியாமல் இருக்க நாம் என்ன பரமார்த்த குரு கதையில் இடம்பெற்றிருக்கும் சீடர்களா என்ன...?.பிரயாணம் மிகச்சிறந்தக் கதை என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் அக்கதை யாருக்கான கதை என்பதை அதற்கு முன் நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அமைதி,விசாரணை நடந்துகொண்டிருக்கிறது

சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.              *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’ நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின. கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீ...

இன்னும் பொறுக்குவேன்

வாழ்த்துகள் ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன். சமரசம் இதழில் 'சாயங்காலத்துப் பறவைகள்' - புதிய நாவலைத் துவங்கியிருக்கிறார். தொடர்ந்து வாசிக்கவும் அதைக்குறித்து எழுதவுமிருக்கிறேன்.  இஸ்லாம் குறித்த கலைச்சொற்களின் தேவையில் எனது வாசிப்பும் எழுத்தும் நிலை குத்தி நிற்கிறது. ஹாஜியார் அப்துல் காதரை அறைந்து விட பேரன் கையை ஓங்குகிறான் காரணம் சொத்துப் பிரச்சனை. பேரனால் ஏற்பட்ட அவமானத்தை இப்பகுதி பேசியிருக்கிறது. இந்த நாவலை நான் வாசிக்க துவங்கியிருப்பதன் நோக்கம் , இஸ்லாமியரிடம் ஊடாடும் சொற்கள் குறித்து அறிந்துகொள்வதும் பொறுக்குவதுமே.. சில சொற்களைப் பொறுக்கி எடுத்தேன். ஹஜ் , வாப்பா, பாங்கு ( சத்தம் ), லுஹர் ( ஒரு வகை தொழுகை ), பெரியாப்பா, மைனி, இன்னும்  பொறுக்குவேன்...

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...