முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

குட்டியக்கா - மலையாள சிறுகதை - எம்.டி.வாசுதேவன் நாயர் @ மொழிப்பெயர்ப்பு - இராம. குருநாதன் ஜானு , குட்டியக்கா இருவரும் சகோதரிகள். குட்டியக்கா மூத்தவள். படு கருப்பி. காது ஓரத்தில் ஒரு மச்சம். அதுவும் அசிங்கமாக. ஜானு அழகு. எல்லோருக்கும் அவளைத்தான் பிடிக்கிறது. குட்டியக்காவிற்கு வரன் அமையவில்லை. ஆனால் சின்னவளுக்கு வரன் நிறைய வருகிறது. ஒரு நாள் பருவை அறுத்துக்கொள்கிறாள். முகத்தில் பவுடர் ஏற்றிக்கொள்கிறாள். அப்படியும் வரன் அமையவில்லை. ஒரு தாழ்த்தப்பட்டவோடு காதல் பிறக்கிறது. குடும்பத்தினர் கண்டித்து செத்துப்போ என திட்டுகிறார்கள். குட்டியக்காவுடன் முழுக்கவே அவளுடைய சித்தி மகன் இருப்பான். அவனிடம் தூக்கத்தில் சொல்லிக்கொண்டிருப்பாள். ' தம்பி....அம்மாவையும் பெரியம்மாவையும் பத்திரமாப் பார்த்துக்கோ...' 

ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டு சிறுகதை

சிவப்பு  ரொட்டித்துண்டு ‘ அடேய் விவசாயி மகனே....என் அரண்மனைக்குள் நுழைந்து சில ரொட்டித்துண்டுகளைத் திருடியிருக்கிறாயடா நீ....?’ கண்களுக்குள் தனலைக்காட்டி கேட்டிக்கொண்டிருந்தான் உருஷ்ய ஜாரரசன் இரண்டாம் நிக்கோலஸ் . உறைக்குள்ளேருந்து வெளிவரும் வாளினைப்போல அவனது கேள்வி வந்திருந்தது. அவனது நாசிகள் துப்பாக்கிக் குழல்களாக விடைத்து நின்றன. புஷ்கின், பொந்துக்கிளியாக இருக்க வேண்டியவன். கூண்டுக்கிளியாக கையறு நிலையில் நின்றுகொண்டிருந்தான். அவனது கால்கள் ஆட்டம் கண்டிருந்தன. அவனுடைய நாசியிலிருந்து ரத்தம் சன்னமாக ஒழுகிக்கொண்டிருந்தது. ஒன்று, இரண்டு, மூன்று - அவனைச்சுற்றி ஒன்பது சிவப்புப்படை காவலர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் ஜாரரசனின் அதிகாரப்பூர்வ காவலர்கள். அவன் காட்டும் ஒவ்வொரு சமிக்ஞைக்கும் ஒவ்வொரு குத்து புஷ்கின் முகத்தில் விழுந்துகொண்டிருந்தது. ‘ ஜாரரசன் அரண்மனைக்குள் நுழைய உனக்கு யாரடா தைரியம் கொடுத்தது...?’ ‘ எத்தனை நாட்களாக இந்த திருட்டு நடக்கிறது...?’ ‘ கேவலம் நீ விவசாயி மகன்தானா நீ...?’ ‘ போல்ஷவீக் கும்பலைச் சேர்ந்தவனா....?’ ‘ உன் திருட்டுக்கு துணைக்கு வந்...
எது வாழ்க்கை? 💮 *உலகப்பேரழகி  கிளியோபாட்ராவின்  கல்லறை  வாசகம*். "உலகத்திலேயே அழகானப் பிணம்   இங்கே  உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல  வேளை  இவள்  பிணமானாள்,  இல்லாவிட்டால்   இந்தக் கல்லறைக்குள்  ரோமாபுரி  சாம்ராஜ்யமே  பிணமாகியிருக்கும்."  💮 *மகா அலெக்சாண்டரின்  கல்லறை  வாசகங்கள்*. "இந்த  உலகம்  முழுவதுமே  போதாது  என்று  சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி  போதுமானதாக ஆகிவிட்டது." 💮 *ஒரு  தொழிலாளியின் கல்லறை வாசகம*். "இங்கே  புதை குழியில் கூட  இவன்  கறையான்களால்  சுரண்டப்படுகிறான்." 💮 *அரசியல்வாதியின்  கல்லறையில்*, "தயவு செய்து  இங்கே  கை தட்டி  விடாதீர்கள்,  இவன்  எழுந்து விடக்கூடாது." 💮 *ஒரு  விலை மகளின்  கல்லறை  வாசகம்.* "இங்கு  தான்  இவள்  தனியாகத் தூங்குகிறாள், தொந்தரவு  செய்யாதீர்கள், பாவம்  இனி  வர முடியாது  இவளால்."

இந்தியை இடித்துக்கட்டுதல்

‘ பிரெஞ்ச் மக்களே, வாருங்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்வோம். ஆங்கிலேயர்களைப் பார்த்து உம் ஆங்கிலம் எமக்குத் தேவையில்லை எனச் சொல்வதற்கு நமக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்...’  பிரெஞ்சு மொழியில் ஆங்கிலம் கலப்பதற்கு எதிரானப் போராட்டத்தில் அறிஞர் டி.எஸ். எலியட் ஆற்றிய உரை இது. அவர் உரையாற்றி முடித்து கீழே இறங்குகையில் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சு மொழியைக் காப்பாற்ற போராடும் நாம் ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்ளச் சொல்வது நம் மொழிக்குச் செய்கிறத் துரோகம் இல்லையா...?. எலியட் சொன்னார். ‘வேண்டும் என்பதை நம் மொழியில் சொல்லத் தெரிந்த நாம் , வேண்டாம் என்பதை அவன் மொழியில் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்...’  தமிழர்களின் தந்தை ஈ.வெ.ரா. பெரியார் தன் வாழ்நாட்களின் பிற்பகுதியை இந்தி எதிர்ப்பிற்காகக் கழித்தவர். ஆனால் ஒரு முரண் என்னத்தெரியுமா..? அவர் தொடக்கத்தில் தன் சொந்த செலவில் இந்திக்கென்று பள்ளி நடத்தியவர் அவர். 1922 ஆம் ஆண்டு அவரது வீட்டிற்கு டாக்டர் அன்சாரி, விட்டல்பாய் படேல், பண்டித மோதிலால் நேரு முதலிய காங்கிரஸ்க்காரர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் வந...

நெகிழிச்சோறு

ஆயக் கலை அறுபத்து நான்கில் முதன்மையானக் கலை சமையல் கலை. பிளாஸ்டிக் அரிசி சந்தைக்கு வந்திருக்கிறது என்கிற புரளியைத் தொடர்ந்து பிளாஸ்டிக் அரிசியைச் சமைத்து சோறு ஆக்குதல் அறுபத்து ஐந்தாவது கலையாகி இருக்கிறது. இதுநாள் வரைக்கும் அறுபத்து ஐந்தாவது கலையாக இருந்த கணினி கலை அறுபத்து ஆறாவது கலையை நோக்கி தள்ளப்படுகிறது. பிளாஸ்டிக் அரிசியை சீனாவின் கொடை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியா சீனா இரண்டு நாடுகளுக்கு இடையேயான பகைமை பிளாஸ்டிக் அரிசியை இந்தியாவிற்குள் அனுமதிப்பதன் வாயிலாக முடிவிற்கு வருகிறது. இனி இந்தியாவின் ஒற்றை மொழி இந்தி , ஒற்றை மதம் இந்து , ஒற்றை உணவு பிளாஸ்டிக் சோறு....இந்த வரிசையில் இந்தியாவின் ஒற்றை எதிரி பாகிஸ்தான். உலகின் முதல் மாற்று அறுவைச் சிகிச்சை மனிதத் தலையிடத்தில்  யானையின் தலையைப் பொறுத்திய அறுவை சிகிச்சைதான் என உலகிற்கு பறைசாற்றிய நம்  விஞ்ஞானிகள் இன்னொரு கண்டுப்பிடிப்பை கண்டறிந்துள்ளனர். அது மணிமேகலை காப்பியக் காலத்து யானை பசியுடைய காயசாண்டிகை கடைசியில்  பசியாறியது இந்த பிளாஸ்டிக் அரிசி சோற்றில்தான். அத்துடன் அவள் அட்சயப்பாத்திரத்தில் சமைத்து எடுத...

பானை

பானை - இரா. முருகன். 1997 ல் கணையாழி இதழில் பிரசுரமான இக்கதை நடுநிசியில் ஒரு பேய்ப்படத்தை பார்த்த திருப்தியைக் கொடுத்தது. மூக்குப்பொடி கடை நடத்தும் ஒரு குடும்பம் ஓட்டல்கடை நடத்துகிறது. வீட்டின் மேல்மாடி எப்பொழுதும் சாத்தப்பட்டிருக்கிறது. அதில் தாத்தாவின் அம்மா இறந்தும் ஆவியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் என அக்குடும்பம் நினைக்கிறது. அதற்கான சமிஞ்கை அவ்வபோது தென்படுகிறது. ஓட்டல் கடை வைத்ததற்கு பிறகு பலரும் கடைக்கு வருகிறார்கள். கிளார்க் மீது கடை நடத்தும் ரெங்கமாளுக்கு கள்ளத்தொடர்பு ஏற்படுகிறது. கணவனுக்கு தெரியாமல்  அவனுடன் அவள் மேல் வீட்டில் கூடுகிறாள். ஒரு நாள் உருவமற்ற பெரியம்மா என்கிற ஆவி அவளுடன் சண்டைப்பிடிக்கிறது. அவளது செய்கைகளைச் சுட்டிக்காட்டுகிறது. அவளை கிணற்றடிக்கு அழைத்துச்சென்று ஆள் மயக்கும் நீண்ட கூந்தலை அறுக்கிறது. இத்தனையும் அவளது கணவன் இறந்த பதினைந்தாம் நாள் நடக்கிறது. கடைசியில் நடுநிசியில் மாடிப்படியேறும் அவள் அந்த ஆவி இருப்பதாக கருதும் பானை உடைத்து கிணற்றுக்குள் எறிந்து கதறி அழுகிறாள் ரெங்கம்மாள். ஒரு ஆவியைக் கொள்வதை உண்மையில் ஒரு மனிதனைக்கொன்ற குற்ற உணர்வாக அவள...
போர்க்கால கதைகள் தொகுப்பு -தி.ஞானசேகரன் ஈழப்போர் ஏற்படுத்திய பல்லேறு அனர்த்தங்களை இக்கதைகள் பேசியிருக்கின்றன. இத்தொகுப்பில் ஒற்றைக்கூவல் - டிலான் ஜெயந்தன், பிறந்த மண் - ராணிசீதரன், காட்டுப்பூனைகளும் பச்சைக்கிளிகளும் - தி.ஞானசேகரன், இடிபாடுகள் - செ.கந்தசாமி, ஒரு பிடி சோறு - ஓ.கே.குணநாதன், அடையாளம் - தாமரைச்செல்வி, பழுதி- சுதர்மமகாராஜன்,கடற்குருவிகள்- குமுதினி கலையழகன்,நாம் யார் - முல்லையூரான்,அது உடைந்து விடக் கூடாது - யோகேஸ்வரி சிவப்பிரகாசம், தொலையும் பொக்கிசங்கள் - இராஜேஸ்கண்ணன்,அலைகடல் தாண்டி- செங்கை ஆழியான், இன்பம் எங்கே - ச. முருகானந்தம் , பொட்டு - வே. சுப்பிரமணியம், காணாமல் போனவனுக்கு ஒரு கடிதம் - தாட்சாயணி, சந்தேகக் கைதிகள் - கே.விஜயன் ,இத்து வரும் சுமைதாங்கிகள் - இராமு சரவணமுத்து ,மணல் - நீரங்க விக்ரசிங்ஹ, யாரிடம் நோவேன்?- சந்திரகாந்த முருகானந்தன் , ஆத்மவிசாரம் - அ.ச.பாய்வா ஆகிய கதைகளின் தொகுப்பாக இக்கதைத்தொகுப்பு வந்திருக்கிறது. மித்ர வெளியீடு. இக்கதைகள் யாவும் ஞானம் இதழில் பிரசுரமானக் கதைகளாக இருக்கிறது. கண்ணப்ப நாயனார் தான் சமைத்து சுவைத்த கறிகளில் நல்லக் கறிகளை சிவனு...
சித்தி - மா. அரங்கநாதன் சித்தி என்கிற தலைப்பை படித்ததும் அது சித்தி பற்றிய கதை என்று நினைத்துவிட்டேன். இக்கதையில் சித்தி என்பது ' அதுவாகவே ஆகுதல்'. இக்கதை தனித்துவமாக எழுதப்பட்டிருக்கவில்லை. ஆனால்  கதை சொல்லி நிறுத்தும் செய்தி தத்துவத்துவமானது. ஒரு இளைஞன் எந்நேரமும் ஓடுபவனாக இருக்கிறான். அவனது ஓட்டத்தைக் கண்டு பிரமிக்கும் ஒருவர் அவனிடம ஒரு முகவரியைக் கொடுத்து ஒரு பெரியவரிடம் அனுப்பி  வைக்கிறார். பெரியவர் முன்னாள் தடகள வீரர். இவனை வைத்து ஒலிம்பிக் பதக்கம் பெற்றுவிட வேண்டும் என நினைத்து பயிற்சி கொடுக்கிறார். தகுதி பெறுகிறான் அவன். பத்திரிகையாளர் பேட்டி எடுக்கிறார்கள். பதக்கம் பெற்றுவிடுவீர்களா....உங்களால் நாடு பெருமையடையுமா.... எல்லா கேள்விக்கும் அவன் 'எனக்கு ஓட்டம் பிடித்தமான ஒன்று...' என்றே சொல்லி வருகிறான். பயிற்சியாளர் அதிருப்தி அடைக்கிறார். பயிற்சியாளரிடம் அவன், எனக்கு நிலவின் மீது ஓட ஆசை. இப்போதைக்கு அதோ அந்த மலையின் உச்சிக்கு ஓட ஆசை.....என தன் ஆசையைத் தெரிவிக்கிறான். அதற்கு அந்த பயிற்சியாளர் சொல்கிறார் ' ஆம்...ஓடு...ஓடிப்போய் உச்சியிலிருந்து குதித்து...

கட்டுரை நீட் - வெளியேற்றும் தேர்வு

அமெரிக்க எழுத்தாளர் தாமஸ் டிஷ் எழுதிய சிறுகதை இது. ‘ஸ்பீக் ஈஸி ’ ஒரு தேசத்தின் அதிபர் பிடிக்காதவர்களையும், பிடிக்காத விதிகளையும் கழற்றிவிடலாம் என நினைக்கிறார். அதற்காக அவர் சட்ட விதிகளைத் திருத்தம் செய்கிறார். அவர் செய்யும் சட்டத் திருத்தம் இவ்வாறு இருக்கிறது. ‘ பொது இடத்தில் நின்றுகொண்டு யாரும் யாருடனும் பேசிக்கொள்ளக்கூடாது. மீறி பேசுவதாக இருந்தால் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட தனி அறையில் உட்கார்ந்து பேசிக்கொள்ளலாம்’.  இக்கதையை சமீப ஒரு நிகழ்வுடன் ஒப்பிட்டு பார்த்துகொள்ளலாம். பொது இடம் என்பது நாடாளுமன்றம். அவரவர் அறை என்பது சட்டமன்றம். சட்டமன்றத்தில் உட்கார்ந்தவாறு பேசிக்கொண்டிருந்த முதலமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்காததன் விளைவு இந்த வருடம் நாடு முழுவதும் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வு நடந்து முடிந்திருக்கிறது.  சட்ட மாமேதை அம்பேத்கரிடம் கேட்டார்கள். ‘ சட்டமன்றம் பெரியதா , நாடாளுமன்றம் பெரியதா...?’. அம்பேத்கர் சொன்னார். ‘ தற்போது இருக்கும் சட்ட விதிகளின் படி சட்டமன்றமே பெரியது. மாநிலங்கள் அவர்களுக்கான உரிமைகளைத் தக்க வைத்துக்கொள்ளும் வரைக்கும் சட்டமன்றமே ப...

அணிந்துரை

ஜன்னல் - பொன்.குலேந்திரன் (கனடா) நூலிற்கு நான் எழுதியிருக்கும் அணிந்துரை  ஜன்னல்  வழியே உலகைக் கதைத்தல் 'ஜன்னல் வழியே வெளியைப் பார்ப்பதுதான் சிறுகதை'  என்கிறார் எச். ஜி.வெல்ஸ். ஜன்னலின் வழியே எவ்வளவுதான்பார்த்துவிட முடியும்...? அது பார்ப்பவர்களின் பார்வையைப் பொருத்தது. ஒரு சராசரி பார்வையாளனால்  கூப்பிடும்  தூரம் வரைக்கும் பார்க்கலாம்.  இன்னும் கொஞ்சம் துருவிப்பார்த்தால் கூப்பிடும் தூரத்தைத் தாண்டி  நம்மையும்  அறியாமல் குவியும் ஏதேனும் ஓர்  ஒற்றைப் புள்ளி வரைக்கும் பார்க்கலாம்.  அந்த ஒற்றைப் புள்ளி பால்வெளித் திரளின் இன்னொரு சூரிய குடும்பமாகக்கூட இருக்கலாம். ஜன்னல் வழியே விரிந்து  பாயும் நம் பார்வை  ஒரிடத்தில் குவியவேச் செய்யும். குவிய வேண்டிய பார்வை குவியாமல் விரிந்தே சென்றால்,  முழு உலகையும் ஜன்னல் வழியே கண்டுவிடலாம். அப்படியாகக் கண்ட உலகை' ஜன்னல்' சிறுகதைத் தொகுப்பின் வழியே  நம்மையும் காண வைக்கிறார் எழுத்தாளர் பொன்.குலேந்திரன் அவர்கள். கனடா வாழ் எழுத்தாளர் பொன். குலேந்திரன் அவர்கள் எனக்கு பரீச்சையமானது அக்னி...

மிகத் துல்லியமானத் தாக்குதல்

மிகத் துல்லியத் தாக்குதல்                  பச்சையும் சாம்பலுமான சீருடையை உடுத்திக்கொண்டு இமயமலையின் அடிவாரத்தில் தவழ்ந்து, மறைந்து தான் வைத்திருக்கும் உலகத் தரமானத் துப்பாக்கிக்கு எவனேனும் ஒருவன் தீவிரவாதி என்கிற பெயரில் இரையாகக் கிடைக்கமாட்டானா....என இந்திய இராணுவத்தினர் தேடுவதைப்போலதான் அன்ஸர் தன் மனைவியைத் தேடிக்கொண்டிருந்தான். எந்த மூலையிலிருந்தும் அழுகையாக, ஓலமாகக் கிடைத்தாலும் போதும் என்றளவில்தான் அவனது தேடல் இருந்தது.        வாழ்கிறோம்...என்கிற பெயரில் ஒரு நாளைக்கு எப்படியேனும் பத்து முறையேனும் செத்துவிடும் எத்தனையோ காஷ்மீரிகளில் அவனும் ஒருவன். உலகில் அதிகம் உச்சரிக்கப்படும் சொற்களில் ஒன்றாக அவனுடைய மாநிலம் இருக்கிறது. இந்தியாவின் மொத்த பனியும் அங்கேதான் கொட்டுகிறது. ஆனால் பனியினாலான நடுக்கத்தை விடவும் பயத்தினாலான நடுக்கமே அவனை பெரிதும் நடுக்கிக்கொண்டிருந்தது. இந்திய வரைபடத்தில்தான் அதன் பெயர் காஷ்மீர். ஆனால் அதன் வாசிகள் அழைப்பது என்னவோ பள்ளத்‘தாக்கு என்றுதான்.   ...