முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
போர்க்கால கதைகள்
தொகுப்பு -தி.ஞானசேகரன்
ஈழப்போர் ஏற்படுத்திய பல்லேறு அனர்த்தங்களை இக்கதைகள் பேசியிருக்கின்றன. இத்தொகுப்பில்
ஒற்றைக்கூவல் - டிலான் ஜெயந்தன், பிறந்த மண் - ராணிசீதரன், காட்டுப்பூனைகளும் பச்சைக்கிளிகளும் - தி.ஞானசேகரன், இடிபாடுகள் - செ.கந்தசாமி, ஒரு பிடி சோறு - ஓ.கே.குணநாதன், அடையாளம் - தாமரைச்செல்வி, பழுதி- சுதர்மமகாராஜன்,கடற்குருவிகள்- குமுதினி கலையழகன்,நாம் யார் - முல்லையூரான்,அது உடைந்து விடக் கூடாது - யோகேஸ்வரி சிவப்பிரகாசம், தொலையும் பொக்கிசங்கள் - இராஜேஸ்கண்ணன்,அலைகடல் தாண்டி- செங்கை ஆழியான், இன்பம் எங்கே - ச. முருகானந்தம் , பொட்டு - வே. சுப்பிரமணியம், காணாமல் போனவனுக்கு ஒரு கடிதம் - தாட்சாயணி, சந்தேகக் கைதிகள் - கே.விஜயன் ,இத்து வரும் சுமைதாங்கிகள் - இராமு சரவணமுத்து ,மணல் - நீரங்க விக்ரசிங்ஹ, யாரிடம் நோவேன்?- சந்திரகாந்த முருகானந்தன் , ஆத்மவிசாரம் - அ.ச.பாய்வா ஆகிய கதைகளின் தொகுப்பாக இக்கதைத்தொகுப்பு வந்திருக்கிறது. மித்ர வெளியீடு.

இக்கதைகள் யாவும் ஞானம் இதழில் பிரசுரமானக் கதைகளாக இருக்கிறது. கண்ணப்ப நாயனார் தான் சமைத்து சுவைத்த கறிகளில் நல்லக் கறிகளை சிவனுக்கு படைத்ததைப்போல தொகுப்பாசிரியர் முதல் ஐம்பது இதழ்களின்  கதைகளில் தேர்ந்தக் கதைகளைத் தொகுத்துள்ளார். தொகுப்பாசிரியர் முன்னுரையில் சொல்லியிருப்பதைப் போல தமிழில் வெளிவந்திருக்கும் தொகுப்புகளில் சிறந்த சிறுகதைத் தொகுப்பு இத்தொகுப்புதான் என்பதில மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அதே நேரம் இக்கதைகள் யாவும் ஒருவரின் கதைகளாக இருந்திருக்குமாயின் இத்தொகுப்பு இன்னும் சற்று கூடுதல் கவனத்தை பெறும்...

இத்தொகுப்பில் காட்டுப்பூனைகளும் பச்சைக்கிளிகளும்  என்கிற சிறுகதை சொல்லப்பட்டிருக்கும் விதத்தால் கவனம் பெறுகிறது. பள்ளிக்கு செல்லும் ஒரு தமிழ் மாணவியை ஒரு சிங்களவன் காமப்பசியாறுவதை வீட்டில் வளர்க்கும் ஒரு பச்சைக்கிளியை ஒரு காட்டுப்பூனை கடிச்சுக்குதறுவதுடன் ஒப்பிட்டு கதையாக்கம் செய்யப்பட்டிருக்கும் விதம் புதுமையானது. இக்கதையில் வரும் மியாவ்....பச்சைக்கிளியோடு நம்மை பதைக்க வைக்கிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அமைதி,விசாரணை நடந்துகொண்டிருக்கிறது

சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.              *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’ நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின. கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீ...

இன்னும் பொறுக்குவேன்

வாழ்த்துகள் ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன். சமரசம் இதழில் 'சாயங்காலத்துப் பறவைகள்' - புதிய நாவலைத் துவங்கியிருக்கிறார். தொடர்ந்து வாசிக்கவும் அதைக்குறித்து எழுதவுமிருக்கிறேன்.  இஸ்லாம் குறித்த கலைச்சொற்களின் தேவையில் எனது வாசிப்பும் எழுத்தும் நிலை குத்தி நிற்கிறது. ஹாஜியார் அப்துல் காதரை அறைந்து விட பேரன் கையை ஓங்குகிறான் காரணம் சொத்துப் பிரச்சனை. பேரனால் ஏற்பட்ட அவமானத்தை இப்பகுதி பேசியிருக்கிறது. இந்த நாவலை நான் வாசிக்க துவங்கியிருப்பதன் நோக்கம் , இஸ்லாமியரிடம் ஊடாடும் சொற்கள் குறித்து அறிந்துகொள்வதும் பொறுக்குவதுமே.. சில சொற்களைப் பொறுக்கி எடுத்தேன். ஹஜ் , வாப்பா, பாங்கு ( சத்தம் ), லுஹர் ( ஒரு வகை தொழுகை ), பெரியாப்பா, மைனி, இன்னும்  பொறுக்குவேன்...

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...