முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கட்டுரை நீட் - வெளியேற்றும் தேர்வு

அமெரிக்க எழுத்தாளர் தாமஸ் டிஷ் எழுதிய சிறுகதை இது. ‘ஸ்பீக் ஈஸி ’ ஒரு தேசத்தின் அதிபர் பிடிக்காதவர்களையும், பிடிக்காத விதிகளையும் கழற்றிவிடலாம் என நினைக்கிறார். அதற்காக அவர் சட்ட விதிகளைத் திருத்தம் செய்கிறார். அவர் செய்யும் சட்டத் திருத்தம் இவ்வாறு இருக்கிறது. ‘ பொது இடத்தில் நின்றுகொண்டு யாரும் யாருடனும் பேசிக்கொள்ளக்கூடாது. மீறி பேசுவதாக இருந்தால் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட தனி அறையில் உட்கார்ந்து பேசிக்கொள்ளலாம்’.  இக்கதையை சமீப ஒரு நிகழ்வுடன் ஒப்பிட்டு பார்த்துகொள்ளலாம். பொது இடம் என்பது நாடாளுமன்றம். அவரவர் அறை என்பது சட்டமன்றம். சட்டமன்றத்தில் உட்கார்ந்தவாறு பேசிக்கொண்டிருந்த முதலமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்காததன் விளைவு இந்த வருடம் நாடு முழுவதும் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வு நடந்து முடிந்திருக்கிறது.  சட்ட மாமேதை அம்பேத்கரிடம் கேட்டார்கள். ‘ சட்டமன்றம் பெரியதா , நாடாளுமன்றம் பெரியதா...?’. அம்பேத்கர் சொன்னார். ‘ தற்போது இருக்கும் சட்ட விதிகளின் படி சட்டமன்றமே பெரியது. மாநிலங்கள் அவர்களுக்கான உரிமைகளைத் தக்க வைத்துக்கொள்ளும் வரைக்கும் சட்டமன்றமே ப...

அணிந்துரை

ஜன்னல் - பொன்.குலேந்திரன் (கனடா) நூலிற்கு நான் எழுதியிருக்கும் அணிந்துரை  ஜன்னல்  வழியே உலகைக் கதைத்தல் 'ஜன்னல் வழியே வெளியைப் பார்ப்பதுதான் சிறுகதை'  என்கிறார் எச். ஜி.வெல்ஸ். ஜன்னலின் வழியே எவ்வளவுதான்பார்த்துவிட முடியும்...? அது பார்ப்பவர்களின் பார்வையைப் பொருத்தது. ஒரு சராசரி பார்வையாளனால்  கூப்பிடும்  தூரம் வரைக்கும் பார்க்கலாம்.  இன்னும் கொஞ்சம் துருவிப்பார்த்தால் கூப்பிடும் தூரத்தைத் தாண்டி  நம்மையும்  அறியாமல் குவியும் ஏதேனும் ஓர்  ஒற்றைப் புள்ளி வரைக்கும் பார்க்கலாம்.  அந்த ஒற்றைப் புள்ளி பால்வெளித் திரளின் இன்னொரு சூரிய குடும்பமாகக்கூட இருக்கலாம். ஜன்னல் வழியே விரிந்து  பாயும் நம் பார்வை  ஒரிடத்தில் குவியவேச் செய்யும். குவிய வேண்டிய பார்வை குவியாமல் விரிந்தே சென்றால்,  முழு உலகையும் ஜன்னல் வழியே கண்டுவிடலாம். அப்படியாகக் கண்ட உலகை' ஜன்னல்' சிறுகதைத் தொகுப்பின் வழியே  நம்மையும் காண வைக்கிறார் எழுத்தாளர் பொன்.குலேந்திரன் அவர்கள். கனடா வாழ் எழுத்தாளர் பொன். குலேந்திரன் அவர்கள் எனக்கு பரீச்சையமானது அக்னி...

மிகத் துல்லியமானத் தாக்குதல்

மிகத் துல்லியத் தாக்குதல்                  பச்சையும் சாம்பலுமான சீருடையை உடுத்திக்கொண்டு இமயமலையின் அடிவாரத்தில் தவழ்ந்து, மறைந்து தான் வைத்திருக்கும் உலகத் தரமானத் துப்பாக்கிக்கு எவனேனும் ஒருவன் தீவிரவாதி என்கிற பெயரில் இரையாகக் கிடைக்கமாட்டானா....என இந்திய இராணுவத்தினர் தேடுவதைப்போலதான் அன்ஸர் தன் மனைவியைத் தேடிக்கொண்டிருந்தான். எந்த மூலையிலிருந்தும் அழுகையாக, ஓலமாகக் கிடைத்தாலும் போதும் என்றளவில்தான் அவனது தேடல் இருந்தது.        வாழ்கிறோம்...என்கிற பெயரில் ஒரு நாளைக்கு எப்படியேனும் பத்து முறையேனும் செத்துவிடும் எத்தனையோ காஷ்மீரிகளில் அவனும் ஒருவன். உலகில் அதிகம் உச்சரிக்கப்படும் சொற்களில் ஒன்றாக அவனுடைய மாநிலம் இருக்கிறது. இந்தியாவின் மொத்த பனியும் அங்கேதான் கொட்டுகிறது. ஆனால் பனியினாலான நடுக்கத்தை விடவும் பயத்தினாலான நடுக்கமே அவனை பெரிதும் நடுக்கிக்கொண்டிருந்தது. இந்திய வரைபடத்தில்தான் அதன் பெயர் காஷ்மீர். ஆனால் அதன் வாசிகள் அழைப்பது என்னவோ பள்ளத்‘தாக்கு என்றுதான்.   ...

ஒரு இலட்சம் ரூபாய் பரிசு

உலகலாவிய சிறுகதைப் போட்டி

மலேசியா நாட்டில் உலகலாவிய சிறுகதைப் போட்டி! தமிழ் மொழி எழுத்தாளர்களுக்கு அழைப்பு சிறுகதை அனுப்ப இறுதி நாள்: ஆனி 16, 2048 / 30.06.2017 மலேசியா நாடடில் இயங்கி வரும் மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு உலகம் தழுவிய சிறுகதைப் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்ளத் தமிழ்ப்படைப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மாணவர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் தேசியத்தலைவர்சு.வை.லிங்கம் அழைப்பு விடுத்துள்ளார். இவ் உலகம் தழுவிய சிறுகதைப் போட்டியின் இந்திய ஒருங்கிணைப்பாளரும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புலத் தமிழியல்துறைத் தலைவருமான(பொ) முனைவர் போ.சத்தியமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு. மலேசியா நாடடில் இயங்கி வரும் மலேசியத் தமிழ் மணி மன்றம் தமிழ் மொழிக்காகவும், பல்கலைக்கழகம், கல்லுரி, பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் திறன்களை மேன்மைப்படுத்தவும், மன்பதைக்காகவும் பல்வேறு அரும்பணிகளைத் தொடர்ந்து செய்துவருகின்றது. இந்த அமைப்பின் பத்தாம் ஆண்டு நிறைவையொட்டி, இளம் தமிழ்ப் படைப்பாளர்களையும் எழுத்தாளர்களையும்...

நூல் போட்டி

பரிசு ₹25000 3 படிகள் வழக்கறிஞர் எஸ்.இராஜகோபால் தலைவர்,இராஜகோகிலா அறக்கட்டளை தென்குமரித் தமிழ்ச் சங்கம் 40, வல்லன் குமரன் விளை கடற்கரைச்சாலை நாகர்கோயில் -2 குமரி மாவட்டம் தொடர்புக்கு....9443225535 நன்றி - தமிழர் எழுச்சிக் குரல்

நூல் பரிசுப்போட்டி

இராஜபாளையம் மணிமேகலை மன்றம் 59-ஆம் ஆண்டுவிழாவை முன்னிட்டு நடத்தும் நூல்களுக்கான பரிசுப் போட்டி 2015, 2016 ஆம் ஆண்டுகளில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, சிறுவர் இலக்கியம், மொழியாக்கம் ஆகிய துறைகளில் வெளியான முதல் பதிப்பு நூல்களில் மூன்று பிரதிகள் அனுப்ப வேண்டும். ஒவ்வொரு துறைக்கும் ரூ 5000 பரிசளிக்கப்படும். எழுத்தாளர் முகவரி, கைப்பேசி எண், தன்முகவரியிட்ட இரண்டு அஞ்சலட்டைகள் அனுப்ப வேண்டும். நூலில் ஏதும் எழுதுதல் கூடாது. ஏற்கனவே பரிசு பெற்றவர்கள் கலந்து கொள்ள வேண்டாம். முடிவு நாள் : 15-07-2017 அனுப்பவேண்டிய முகவரி: தலைவர், மணிமேகலை மன்றம், 146/1 குறிஞ்சித்தெரு, பி.எஸ்.கே. நகர் அஞ்சல், இராஜபாளையம் 626 108 பேசி : 99444 15322

இலக்கியப்போட்ட2017

தேவைதானா தேக்கம்..?

ஆண்டன் செகாவ் எழுதிய ஒரு சிறுகதை ' தும்மல் '. ஒரு தொழிலாளி நாடகக் கொட்டகையில் நாடகம் பார்ப்பார். எதேச்சையாக தும்மல் வந்து விடும். தும்மலின் ஒரு துளி அவர் வேலை பார்க்கும் பெரிய அதிகாரியின் மீது தெறித்து விழுந்து விடும். எச்சில் தெறித்திருப்பது அதிகாரி எனத் தெரிந்ததும் தொழிலாளிக்கு பயம் தொற்றிக்கொள்ளும். அதிகாரியிடம் மன்னிப்பு கேட்பார் தொழிலாளி. அதிகாரி முகத்தைக் கோபமாக வைத்துகொண்டு ஆமோதிப்பார். அதிகாரி மீதான பயம் அவரை விட்டு போகாது. அதிகாரியை பார்க்கும் இடமெல்லாம் முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு மன்னிப்புக் கேட்பார். அதிகாரி தலையாட்ட மட்டும் செய்வார். தன்னை இன்னும் அதிகாரி முழுமையாக மன்னிக்கவில்லை என நினைத்து கொண்டு அத்தொழிலாளி அர்த்த ராத்திரியில் தூக்கம் வராமல் தவித்து அதிகாரியின் வீட்டு கதவைத் தட்டி மன்னிப்பு கேட்பார். அதிகாரியின் கோபத்தால் அத்தொழிலாளியின் வேலை பறிபோகும். இக்கதையை வாசிக்கும் பொழுதெல்லாம் எனக்கு பதினைந்து இருபது வருடங்களுக்கு முந்தைய பள்ளிக்கல்வி முறை நினைவிற்கு வரும். தும்மல் கதையில் இடம்பெற்றுள்ள அதிகாரி பாத்திரத்தில் ஆசிரியரையு...

கவிமுகில் அறக்கட்டளை விருது

நூல்கள் வரவேற்கப்படுகின்றன நன்றி - காக்கைச் சிறகினிலே

22 இலட்சங்கள் பரிசுத்தொகை விருதுகள்

22 இலட்சங்கள் பரிசுத்தொகை விருதுகள் நூல்கள் வரவேற்கப்படுகின்றன. Google+ Calendar Web more Primary Fwd: தமிழ்ப்பேராய விருதுகள் - 2017 V Venugopalan SV to 31 minutes agoDetails அன்பானவர்களுக்கு படைப்புகளுக்கான விருது குறித்த மெயிலை யாரோ அன்பர் அனுப்பியிருந்தார்- forward செய்துள்ளேன், பார்க்கவும். இணையதள முகவரி இங்கே: http://www.srmuniv.ac.in/sites/default/files/2016/tp_awards2017.pdf எஸ் வி வி பேரன்புடையீர், வணக்கம். இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராயம் என்ற ஓர் அமைப்பை நிறுவி கடந்த ஆறு ஆண்டுகளாக அரிய தமிழ்ப்பணிகளை ஆற்றிவருகிறது. அதன் பணிகளில் ஒன்றாக ரூ. 22,00,000 மதிப்பிலான 12 தலைப்புகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது, பாரதியார் கவிதை விருது, அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது, ஜி.யூ. மொழிபெயர்ப்பு விருது, பெ.நா. அப்புசாமி அறிவியல் தமிழ் விருது, ஆனந்தகுமாரசாமி கவின்கலை விருது அல்லது முத்துத்தாண்டவர் தமிழிசை விருது, புலம்பெயர்ந்த படைப்பாளிகளுக்கான விபுலானந்தர் பட...

தமிழ் வளர்ச்சித்துறை நூல் போட்டி

தமிழ் வளர்ச்சித் துறையால் நடத்தப்படும், சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு போட்டிக்கு 2016ல் வெளியிடப்பட்ட நூல்கள், 33 வகைப்பாடுகளின் கீழ் வரவேற்கப்படுகின்றன. ஒவ்வொரு வகைப்பாட்டில், ஒரு நூல் தேர்வு செய்யப்பட்டு, நூலாசிரியருக்கு 30 ஆயிரம் ரூபாய்; பதிப்பகத்தாருக்கு, 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும். விண்ணப்பம் மற்றும் விபரங்களை, www.tamilvalarchithurai.org இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சென்னை எழும்பூர், தமிழ் சாலையில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்குனர் அலுவலகத்திலும், நேரடியாகவோ, தபால் மூலமாகவோ, விண்ணப்பம் பெறலாம்; ஜூலை 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பயனுள்ள இணைய தளங்கள்

சான்றிதழ்கள் :- 1) பட்டா / சிட்டா அடங்கல் http://taluk.tn.nic....chitta_ta.html… 2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட http://taluk.tn.nic...._ta.html?lan=ta 3) வில்லங்க சான்றிதழ் http://www.tnreginet...n/EC.asp?tams=0 4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் http://www.tn.gov.in...forms/birth.pdf http://www.tn.gov.in...forms/death.pdf 5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ் http://www.tn.gov.in...t-community.pdf 6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ் http://www.tn.gov.in...cert-income.pdf C. E-டிக்கெட் முன் பதிவு 1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு http://tnstc.ticketc...in/TNSTCOnline/ http://www.irctc.co.in/ http://www.yatra.com/ http://www.redbus.in/ 2) விமான பயண சீட்டு http://www.cleartrip.com/ http://www.makemytrip.com/ http://www.ezeego1.co.in/ D. E-Payments (Online) 1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி http://portal.bsnl.i...iles/login.aspx 2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி https://www.oximall.com/ http://www.rechargeitnow.com/ http://www.itzcash.com/ 3...
இளவேனில் பதிப்பகம் நடத்தும் எழுத்தாளர் வே.சபாநாயகம் நினைவுத் சிறுகதைப்போட்டி பரிசுகள் ₹ 5000, ₹3000,₹2000 கடைசி நாள் 30.06.2017 மின்னஞ்சலில் மட்டும் கதை அனுப்பப்பட வேண்டும் iectvdm@gmail.com நன்றி வே.ரத்தினசபாபதி சென்னை

நூல்கள் வரவேற்கப்படுகின்றன

பாரதி கலை இலக்கியப் பேரவை சிறுகதை, கவிதை, கட்டுரை நூல்களுக்கானப் போட்டி 2015 முதல் 2017 ஜூலை மாதம் வரை வெளியிட்டுள்ள நூல்கள் பரிசுகள் தலா ₹4000 , ₹2000 மூன்று பிரதிகள் அனுப்ப வேண்டும். கடைசி தேதி 15.7.2017 முகவரி கவிஞர் பரதன் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை பாரதி அச்சகம் , அமராவதி திரையரங்கச் சந்து கம்பம் 625516 உத்தமபாளையம் வட்டம் தேனி மாவட்டம்
அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி - 2017 எட்டு பக்கங்களுக்கு மிகாமல். கடைசி தேதி ஜூன் 15. பரிசுகள் ₹ 10000 , ₹7000,₹5000. முகவரி அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டி 2017 கல்கி பில்டிங்க்ஸ் 47 NP ஜவாஹர்லால் சாலை ஈக்காடுதாங்கல் சென்னை 32. தகவல்- கல்கி வார இதழ்.
பொன்.குலேந்திரன் - கனடா எழுத்தாளர். அக்னிக்குஞ்சு இணைய இதழ் வழியே இவரது படைப்புகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்து பல கதைகளை உடனுக்குடன் விமர்சனம் செய்திருக்கிறேன். அவரது விதி என்கிற ஒரு கதையை சற்று ஆழமாக விமர்சனம் செய்யப்போய் நேரடி அழைப்பிற்கு வந்தார். அவ்வபோது அவரது படைப்புகளை இணைய வழியில் அனுப்பி வந்தவர் அவரது நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சமீபத்தில் அவர் வெளியிட்ட இரண்டு நூல்களை எனக்கு அனுப்பி வைத்தார். 1. Generation ( the story of a estate worker) 2. Strange Relationship Generation நாவலை முதலில் ஆங்கிலத்தில் எழுதி பிறகு அதை தமிழில் குறுநாவலாக வடிவாக்கம் செய்ததை எனக்கு அனுப்பி வைத்தார். நான் அதை ஒவ்வொரு அத்யாயமாக வாசித்து விமர்சனம் எழுதிக்கொண்டு வந்தேன் . கனடாவிலிருந்து அவர் எழுதியிருந்தாலும் கதை நமூர் திருநெல்வேலி வழியே சிலோனில் அடைக்கலம் கொள்கிறது. சிங்களர்கள் இவருடைய பார்வையில் வேறொரு விதமாகத் தெரிகிறது. எனது தாத்தா கண்டியில் தேயிலைத் தோட்டத்தில் வேலைப்பார்த்ததும் என் அம்மா கண்டியில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் அவர்கள் என்னுடன் பகிர்ந்து கொண்டதன் அடிப்படையில் தலைமுறை நாவலை ஒப...