முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வேட்கை இலக்கிய இதழ்

இன்றைய தினம் எனக்கு பிடித்தமான கட்டமைப்பில் சிற்றிதழிலும் சிறிய இதழாக சேலம் மாவட்டத்திலிருந்து ஒரு இதழ் கைக்கு வந்தது. - வேட்கை -




நவீன இலக்கியப் படைப்பாளர்களுக்கான களம் என்கிற அடையாளத்தோடு வந்திருந்த இதழைப் பார்க்கையில் எனக்கும் கூட இப்படியாக  ஒரு இதழைத் துவங்கிவிடலாம் என்கிற ஆசை வந்துவிட்டது.  - Cool down :(

இதழ் முழுக்கவே மா. அரங்கநாதனின் பேட்டி.

தூண்டிலாக வீசப்பட்ட கேள்விகள். வலையில் சிக்கிய மீன்களாக பதில்கள்.

#உண்மையோடு உறவு வைத்துக்ககொள்ளாத எதுவும் படைப்பு ஆவதில்லை.

#என்னைப் பொறுத்தவரை படைப்பிலக்கியம் சம்பந்தப்பட்ட பல சந்தேகங்களுக்கு கவிதை அம்சமே நல்ல பதிலைத் தந்தது.

#உதைப்பந்து விளையாட்டிற்குக் கூட இலக்கணம் இருக்கிறது. இந்த கவிதைக்கு இல்லையா? என்கிற கேள்விக்கு உதைப்பந்து விளையாட்டிற்கு இலக்கணம் இருக்கிறது. டென்னிஸ் விளையாட்டிற்கு இருக்கிறது. கிரிக்கெட்டிற்கு விளையாட்டிற்கு இருக்கிறது. ஆனால் விளையாட்டிற்கு என்று எதாவது இலக்கணம் இருக்கிறதா?

#நான் எழுதி முடித்த பின்னரே என்ன எழுதினேன் என்பது தெரிய வருகிறது...இப்படியான பல பதில்கள்.

பதில்களின் பிரமாத வரிசையில் மிக நுட்பமாக ஒரு கேள்வி

#' உங்கள் வீடு பேறு கதையில் சான்பிரான்சிஸ்கோவிலிருந்து திருவல்லிக்கேணிக்கு தன் தாயார் இறந்து போன மாடியறையைப் பார்த்துப் போக வருகிறான். வந்தவன் அங்கே அந்த வீட்டுக்காரரோடு நாள் முழுவதும் பேசிக் கொண்டிருந்துவிட்டு அந்த அறையைப் பார்க்காமலேயே போகிறான். அந்த வீட்டுக்காரர் ஞாபகப்படுத்தியும் கூட - ஏன் என்று சொல்ல முடியுமா?


ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

மா.அரங்கநாதனுக்கு சாகித்ய விருது கிடைக்கவில்லையென ஆதங்கப்படுகிறார். அட விடுங்க சார் விருதா முக்கியம். திரும்பவும் அவரது படைப்பை வாசிப்பதே முக்கியம்...



இதழ் தொடர்புக்கு..
அ.கார்த்திக்கேயன்
36/14 ஆறாவது குறுக்கு ( கிழக்கு) வித்யா நகர் ,அம்மாபேட்டை ,சேலம் - 636003
           - 25.10.2018 * 5.29pm


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...

மதினிமார்கள் கதை

கோணங்கி எழுதிய சிறுகதைகளில் மதினிமார்கள் கதை பரவலான கவனிப்பைப் பெற்றது. அக்கதையை  இன்றைய தினம் வாசித்தேன். சாத்தூரையொட்டிய நென்மேனி மேட்டுப்பட்டியில்  வாழும் பெண்கள் செம்பகத்திற்கு மதினிகளாக இருக்கிறார்கள். அவனது மூக்கில் சின்ன வயதில் அணிவித்த செம்புகம்பியால் அவன் செம்புகோம் என கேலியாகவும் செல்லமாகவும் அழைக்கப்படுகிறான். அவனை வேலைக்காரனாக , எடுபிடி ஆளாக,... சோறுப்போட்டு ஒரு ஊரே வளர்க்கிறது.  ஆவுடத்தங்க மதினி சுப்பு மதினி காளியம்மா மதினி அமராவதி மதினி குருவு மதினி மாணிக்க மதினி என மதினிமார்களுடன் வளர்ந்த செம்பகம் வெளியூரிலிருந்து  அக்கிராமத்திற்கு செல்கையில் அவ்வூர் எப்படியாக இருக்கிறது என்பதுதான் கதை சொல்லவரும் செய்தி.  இருண்ட தார் விரிப்பின் ஓரங்களில் உருவமே மாறிப்போய் - என்கிற முடிவுப்பத்தியால் கிராமம் அடைந்த பரிணாமத்தைக் காட்டுகிறார். முதிர்ந்த வயதுடைய பெரியாள் உருமியைத் தேய்க்கிற தேய்ப்பில் வருகிற அமுத்தலான ஊமைக்குரல் அடிநெஞ்சுக்குள் இறங்கி விம்மியது என்கிற இடம் துக்கத்தை நனைக்கும் வரி. பனையிலிருந்து கிடைக்கும் பொருளில் ஒன்றாக தவுண் அ...

அமைதி,விசாரணை நடந்துகொண்டிருக்கிறது

சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.              *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’ நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின. கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீ...