முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சிறுகதை அமில பரிசோதனை

வாரத்தின் முதல்நாள், ஞாயிற்றுக்கிழமை பிறந்தால் போதும். உங்கள், எமது, நமது தொலைக்காட்சிகளுக்கு படுகொண்டாட்டம்தான். அதிலும் செய்தி சேனல்களுக்கு சொல்லவே வேண்டியதில்லை. செய்தியோடு விளையாடி, செய்தியோடு உறவாடி, செய்தியோடு மல்லுக்கட்டும் செய்தி, செய்தி, செய்திகள்தான்.        அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் தொடங்கும் செய்திகள் இரவு பனிரெண்டு மணியானால் ‘குட் நைட்’ அவர்களின் வாயிலிருந்து வரணுமே......!        மணி ஐந்துக்கு திரைச்செய்திகள்.        ஆறுக்கு வரிச்செய்திகள்.        ஏழு மணிக்கு தலைப்பு செய்திகளுடன் கூடிய அரசியல், விளையாட்டு, உலக செய்திகள்        மணி எட்டுக்கு அரை வட்ட அமர்வுகள்.        மணி ஒன்பதுக்கு நேர்க்காணல்.        நேர்க்காணல், விவாதங்கள் நடத்திடாத தொலைக்காட்சி ஒரு தொலைக்காட்சியா.... எனச் சொல்லும் அளவிற்கு எல்லா தொலைக்காட்சிகளும் நேர்காணல் நிகழ்ச்சியை நடத்தத்தொடங்...

சிறுகதை இவனல்ல இவன்

   ‘எங்கள் சாதிச்சங்கத் தலைவரின் மீது கொலைப்பழி சுமத்தி கைது செய்திருக்கும் இன்ஸ்பெக்டரை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.....’        தெரு, மூத்திரச்சந்து, குட்டிச்சுவரென எங்கும் ஒட்டிக்கிடந்த சுவரொட்டிகள் காவல்துறைக்குச் சொந்தமான ‘பளே சிவப்பு’ சுவற்றிலும் ஒட்டியிருந்தன. வெளிரிய மஞ்சளில் சிவப்பு எழுத்துகளளான சுவரொட்டிகள் அவை. இருபதுக்கு பத்து அளவிலான பதாகை ஒன்று மூன்று சாலைகள் சந்தித்துகொள்ளும் முச்சந்தியில் விசாலமாக நிறுத்தப்பட்டிருந்தது. அதில் அவர்களது சாதி, குலப்பெருமைகள் மயங்கொலி, சந்திப்பிழைகளுடன் அச்சாகியிருந்தன. ஆண்ட வம்சம் ஆன்ட வம்சம் என்றும் குலப்பெருமை  குளப்பெருமை எனவும் இருப்பதைக்கண்டு அந்த ஊரில் தமிழ்ச்சாதிக்காகக் கோபப்பட யாரும் இல்லாமல் இருந்தார்கள்.        இவைதவிர எந்தப்பக்கம் திரும்பினாலும் மக்கள் கண்களில் படும்படியான பதாகைகள் சாலைகள் , சந்திப்புகள், திருப்பங்களில் வைக்கப்பட்டிருந்தன. பல இடங்களில் அவர்களது சாதிக்கான அகோர நிறத்துடன் கூடிய கொடிகள் பறந்துகொண்டிருந்தன. இத்துடன் நான்கிற்கு மூன்று அளவி...

ஒரு நாடோடிக்கலைஞன் மீதான விசாரணை

‘ என்ன வேலை பார்க்கிறாய் நீ...’ ‘ பாடகனாக இருக்கேன்....’  ‘ உன் தொழிலைக்கேட்கிறேன்....?’ ‘ தொழிலைத்தான் சொல்கிறேன்....’ ‘ பாடுறது ஒரு தொழில் கிடையாதே....’ ‘ இருக்கலாம்.  நான் அதை முறைப்படுத்திச் செய்துகிட்ருக்கேன்...’ ‘ எதையெல்லாம் பாடுவ...?’ ‘ என்னெல்லாம் எழுதுறேனோ அதையெல்லாம் பாடுவேன்’  ‘ நீ எழுதியது எதாவது இதழ்களில் வந்திருக்கிறதா....?’ ‘ வந்ததில்லை....’  ‘ பிறகு ஏன் எழுதுறே......?’ ‘ பாடுவதற்காக எழுதுகிறேன்......’ ‘ என்னெல்லாம் எழுதியிருக்கே.....?’ ‘ பாட்டாளியைப்பற்றி எழுதிருக்கேன்... அவன் வாங்குகிற கூலி வீடு போய் சேராததைப்பற்றி எழுதிருக்கேன் ....’ ‘ பாட்டாளியை மட்டும்தான் எழுதுவே....ம்....?’ ‘ அரசியல்வாதிகளையும் எழுதிருக்கேன்....’ ‘ அவர்களைப்பற்றி எப்படி எழுதியிருக்கே..?’ ‘ அவர்கள் செய்கிற ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, அவர்கள் நடத்துகிற சாதி அரசியல், மத அரசியல்,....இதெல்லாம் பற்றி எழுதியிருக்கேன்.....’ ‘ எங்களப்பத்தி எழுதியிருக்கீயா....? ‘ ம்......’ ‘ எப்ப.....?’ ‘ சீர்காழியில ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னாடி ஒரு போலீஸ்...