முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அகதிகளுக்கருள்வாய் நன்நெஞ்சே.....

என் நண்பர் ஒருவர் உலகத்தில் நடக்கும் கூத்துகளைப்பார்த்து ‘ சிரிய்யா ... சிரிய்யா ....’ என்றார் . எப்படிய்யா சிரிக்க முடியும் ...?.   சிரிய்யா ... சிரிய்யா .... என்கையில் எனக்கு சிரியா நாடு அல்லவா நினைவிற்கு வருகிறது .         சிரியாநாடு கொண்டிருக்கும் இன்றைய தட்ப வெப்பம் ‘ போரும் போர் நிமித்தமுமானது ’. சிரியா நாட்டில் போருக்கு எதிராக கருத்துச்சொன்னவர்கள் கூட படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் . அதில் ஒருவர் ட்ரூஸ் . இவர் மதக்குரு தலைவர் . இவர்   உக்கிர போர் நிகழ்த்தும் ஐஎஸ் தீவிரவாதத்தின் மீதும் அதை எதிர்க்கொள்ளும் சிரியா அரசின் மீதும் அதிர்ப்தி தெரிவித்திருந்தார் . அவரையும் அந்த உக்கிரப்போர் விட்டு வைக்கவில்லை .         சிரியாவில் போர் முடிவிற்கு வருகையில் சிரியாவில் வசிக்க யாரும் இருக்கமாட்டார்கள் எனத்தெரிகிறது . பாதிபேர் கொல்லப்பட்டிருப்பார்கள் இன்னும் பாதிபேர் ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக்கப்பட்டிருப்பார்கள் .     ...