செவ்வாய், 11 ஏப்ரல், 2017

சிகரம் இதழ் ஆண்டுவிழா கரூர் நகரத்தார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஏப்ரல்- 2 ,2017 ஞாயிறு அன்று நடைப்பெற்ற விழாவில் மேல.பழனியப்பன் விழாவிற்கு தலைமை வகித்தார். விழாவில் சிகரம் சிறப்பாசிரியர் சந்திரா மனோகரனின் உறவுகள் பலவிதம் அமரனின் உமார் கயாம் பாடல்கள் மொழிப்பெயர்ப்பு பழ. அன்பு நேசனின் தைப்புரட்சி 2017 ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. இனிய நந்தவனம் இதழ் சிற்றிதழ் விருதினையும் வாழ்நாள் சாதனையாளர் விருது கவிஞர் வீ.தங்கராஜ் சமூக சேவை விருது திருமதி ஜெயலெட்சுமி வளரும் இளம் எழுத்தாளர் விருது எனக்கும் வழங்கப்பட்டது. எனது ஏற்புரை காத்திருக்கத் தெரியாத கடிகார முட்களைப்போல சிறுகதை என்று ஓடிக்கொண்டிருக்கும் என்னை நிறுத்தி ஒட்டுத் திண்ணையில் உட்கார வைத்து விசிறி இளநீர் கொடுத்து நலம் விசாரிக்கையில் ஏற்படுகின்ற ஆயாசம் சிகரம் விருது பெறுகையில் எனக்கு ஏற்பட்டது. நான் பெற்ற முதல் பரிசு சிகரம் நடத்திய சிறுகதைப் போட்டியில்தான். சிகரம் இதழை வாழ்த்துகிறேன்.

2 கருத்துகள்:

  1. விழா நிகழ்வுப் பகிர்வுக்கு நன்றி. விருது பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு

இரோம் ஷர்மிளா - ஒரு பெண் புலியின் பொதுவழிப்பாதை

சிகரம் 15 - ஆம்  ஆண்டு இலக்கிய போட்டிகள்  சிறுகதை / கவிதை / கட்டுரை  முதல் பரிசு ரூ 1000/ இரண்டாம் பரிசு 750/ மூன்றாம் பரிசு 500 படைப்...